- Home
- Cinema
- ‘பிக்பாஸ் 6’ இன்னும் தொடங்கவே இல்ல... அதற்குள் Army-யா! நெட்டிசன்களால் கொண்டாடப்படும் இலங்கை பெண் போட்டியாளர்
‘பிக்பாஸ் 6’ இன்னும் தொடங்கவே இல்ல... அதற்குள் Army-யா! நெட்டிசன்களால் கொண்டாடப்படும் இலங்கை பெண் போட்டியாளர்
BiggBoss Tamil 6 : வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த பின்னர் தான் அதில் உள்ள போட்டியாளர்களுக்கு டுவிட்டரில் ஆர்மி தொடங்கப்படும். ஆனால் இந்த முறை நிகழ்ச்சி தொடங்கும் முன்பே ஒரு போட்டியாளருக்கு ஆர்மியை தொடங்கிவிட்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது ஓவியா தான். ஏனெனில் இந்நிகழ்ச்சி மூலம் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார் ஓவியா. பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ஓவியாவுக்கு தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித், விஜய்க்கு நிகரான ரசிகர்கள் இருந்தனர்.
பிக்பாஸ் போட்டியாளர் ஒருவருக்கு டுவிட்டரில் ஆர்மி தொடங்கப்பட்டது என்றால் அது ஓவியாவுக்கு தான். அந்த அளவுக்கு மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இருந்தார் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துவிட்டாலும் ஓவியாவை மிஞ்சும் அளவுக்கு இதுவரை எந்த ஒரு பெண் போட்டியாளருக்கு வரவேற்பு கிடைத்ததில்லை என்பதே உண்மை.
இதையும் படியுங்கள்... அண்ணனை பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பிவிட்டு... பிரபல தமிழ் நடிகை போட்ட உருக்கமான பதிவு
ஓவியா ரசிகர்களால் தொடங்கப்பட்ட இந்த ஆர்மி டிரெண்ட்டை அடுத்தடுத்த சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கும் ரசிகர்கள் பின்பற்றினர். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த பின்னர் தான் அதில் உள்ள போட்டியாளர்களுக்கு டுவிட்டரில் ஆர்மி தொடங்கப்படும். ஆனால் இந்த முறை நிகழ்ச்சி தொடங்கும் முன்பே ஒரு போட்டியாளருக்கு ஆர்மியை தொடங்கிவிட்டனர்.
அது யாரென்றால், ஜனனி என்கிற பெண் போட்டியாளருக்கு தான். இலங்கையை சேர்ந்த இவர், தொகுப்பாளினியாக பணியாற்றி வந்துள்ளார். முன்னதாக இலங்கையை சேர்ந்த பெண் போட்டியாளரான லாஸ்லியா கடந்த 3-வது சீசனில் பங்கேற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். தற்போது அவரைப் போலவே ஜனனியையும் தற்போதே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். அவரின் அழகிய புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டில் பொதுமக்கள் அடையாளத்தோடு உள்ளே செல்லும் 2 பேர் யார்..? வெளியானது போட்டியாளர்கள் லிஸ்ட்!