அண்ணனை பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பிவிட்டு... பிரபல தமிழ் நடிகை போட்ட உருக்கமான பதிவு
BiggBoss 6 : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள், திருநங்கை ஒருவர் என மொத்தம் 20 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் இன்று தொடங்க உள்ளது. இதில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் நேற்று இரவே பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுவிட்டனர். அந்த எபிசோடு இன்று மாலை தான் ஒளிபரப்பப்பட உள்ளது. இருப்பினும் அதற்கு முன்னரே அதில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் முழுவதும் லீக் ஆகிவிட்டன.
அதன்படி இந்த முறை பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள், திருநங்கை ஒருவர் என மொத்தம் 20 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதுதவிர மேலும் சிலரும் இனி வரும் நாட்களில் சர்ப்ரைஸ் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... வீடு ரெடி.. வீரர்களும் ரெடி.. வேட்டைக்கு நீங்க ரெடியா..? வெளியானது பிக்பாஸ் புரோமோ..
பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றி தகவல்கள் லீக்கானாலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போட்டியாளர் ஒருவர் தான். அவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன். இவர் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார் என்பதை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தன் அண்ணனோடு எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், அதில் குறிப்பிட்டுள்ளதாவது : “ரொம்ப ரொம்ப சந்தோஷமாவும் இருக்கும், ரொம்ப ரொம்ப எமோஷனலாவும் இருக்கு. என் அண்ணன் இப்போது பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அவரை நான் புஜ்ஜினு தான் கூப்பிடுவேன். சகோதரன், நண்பன், அப்பா என எனக்கு எல்லாமே அவன் தான்.
கண்டிப்பாக அவனை சில நாட்கள் மிஸ் பண்ணப் போகிறேன். ஆனால் நான் அவனுக்கு சொல்ல விரும்புவதெல்லாம் வாழ்த்துக்கள் தான். பிக்பாஸ் மூலம் வெற்றிகரமான திரும்பி வர வேண்டும். இந்த வாய்ப்பை தந்த விஜய் டிவிக்கு நன்றி. என் அண்ணன் புஜ்ஜிக்கு ஆதரவளியுங்கள்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டில் பொதுமக்கள் அடையாளத்தோடு உள்ளே செல்லும் 2 பேர் யார்..? வெளியானது போட்டியாளர்கள் லிஸ்ட்!