தங்க மோதிரத்தோடு எனக்கு மாமியாரா வருவீங்களா என்று புரபோஸ் பண்ணிட்டாரு: ரம்யா பாண்டியனின் அம்மா ஜாலி பேச்சு!
Ramya Pandian Mother Said that Lovel Dhawan Proposed Her with Gold Ring : எனக்கு மாமியாரா வருவீங்களா என்று கேட்டு என்னிடம் புரபோஸ் பண்ணிட்டாரு என்று ரம்யா பாண்டியனின் அம்மா சாந்தி துரைபாண்டியன் கூறியுள்ளார்.
Ramya Pandian Lovel Dhawan Honeymoon
Ramya Pandian Mother Said that Lovel Dhawan Proposed Me : டம்மி டப்பாசு படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய தமிழ் படங்களிலும் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். தற்போது இடும்ன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் போதுமான வரவேற்பு கிடைக்காத நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
Ramya Pandian Lovel Dhawan Honeymoon
இந்த நிகழ்ச்சியில் புகழ் உடன் இணைந்து பிரபலமானார். இந்நிகழ்ச்சி கொடுத்த வரவேற்பு பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் 3ஆவது ரன்னர் அப் ஆக வந்தார். குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் அவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என்பார்கள். ஆனால், ரம்யா பாண்டியனுக்கு இந்த இரண்டு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட பிறகும் கூட போதுமான அளவிற்கு சினிமா வாய்ப்புகள் வரவில்லை. அவரது கதாபாத்திரத்தை சொல்லும் படமும் கிடைக்கவில்லை.
Ramya Pandian Marriage
கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியும் பிரயோஜனம் இல்லை. இந்த நிலையில் தான் யோகா மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த நவம்பர் 9ஆம் தேதி யோகா மாஸ்டரான லவல் தவானுக்கும், ரம்யா பாண்டியனுக்கும் ரிஷிகேஷில் திருமணம் நடந்தது. இப்போது இருவரும் ஹனிமூன் கொண்டாட்டத்திற்கு தாய்லாந்தில் இருக்கின்றனர்.
Ramya Pandian Wedding Photos
ரம்யா பாண்டியன் காதலித்து வருவது ஆரம்பத்தில் தங்களுக்கு தெரியாது. அதன் பிறகு அவராக வந்து தான் எங்களிடம் சொன்னாள் என்று ரம்யா பாண்டியனின் அம்மா சாந்தி துரைபாண்டியன் கூறியிருக்கிறார். இது குறித்து சாந்தி துரை பாண்டியன் கூறியிருப்பதாவது: ரம்யா பாண்டியனின் அப்பா இறந்த பிறகு முழு பொறுப்பும் அவரிடம் சென்றது. குடும்பத்தை நல்லபடியாக கவனித்து வந்தாள்.
Ramya Pandian Wedding
யோகா கற்றுக் கொள்ள சென்ற இடத்தில் யோகா மாஸ்டரை காதலிக்க ஆரம்பித்துள்ளார். தனது காதலை முதலில் ரம்யா பாண்டியன் தான் லவல் தவானிடம் கூறியிருக்கிறார். ரம்யா பாண்டியனை பிடித்துப் போக லவல் தவானும் ஓகே சொல்லிவிட்டார். கார்த்திகை தீபம் அன்று எங்களது வீட்டிற்கு லவல் தவான் வந்தார். அம்மா நீங்கள் என்னோட மாமியாரா வருவீங்களா என்று கேட்டு என்னிடம் தங்க மோதிரத்தை காண்பித்து பிரபோஸ் செய்தார். அதனை பார்த்து எனக்கு ஒரே ஷாக். கல்யாண செலவை எல்லாம் அவர்கள் தான் ஏற்றுக் கொண்டார்கள். வரதட்சணை கூட வாங்கவில்லை. ரிஷிகேஷில் தான் திருமணம் நடைபெற்றது.
Ramya Pandian, Lovel Dhawan
ரம்யா பாண்டியனின் மாமியாரும், மாமனாரும் ஜாலியான டைப். லவல் தவான் மருமகனாக கிடைச்சதுக்கு கொடுத்து வைத்திருக்கணும். என்னோட மகள் இப்போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறாள் என்று ஜாலியாக பேசியிருக்கிறார்.
விக்ரமுக்கு தேசிய விருது கொடுத்த பிதாமகன் படத்தில் சூர்யா நடித்த ரோல் என்னுடையது – கருணாஸ்!