- Home
- Cinema
- கவுண்டமணி செந்திலின் 100ஆவது படம் – 425 நாட்கள் ஓடிய படம்: கரகாட்டக்காரன் என்னுடைய படம் – ஷோபனா வருத்தம்!
கவுண்டமணி செந்திலின் 100ஆவது படம் – 425 நாட்கள் ஓடிய படம்: கரகாட்டக்காரன் என்னுடைய படம் – ஷோபனா வருத்தம்!
Shobana Gives Explanation about why She Miss Karakattakkaran Movie : ராஜமராஜனுக்கு பேரும் புகழும் பெற்றுக் கொடுத்த கரகாட்டக்காரன் நான் நடிக்க வேண்டிய படம் என்று நடிகை ஷோபனா வருத்தமாக கூறியுள்ளார்.

Karakattakaran
தமிழ் சினிமாவில் ஒருவர் நடிக்க வேண்டிய படத்தில் மற்றொருவர் நடித்து ஹிட் கொடுத்த சம்பவங்கள் ஹீரோவிற்கு மட்டுமின்றி ஹீரோயினுக்கும் நடந்திருக்கிறது. கால்ஷீட் பிரச்சனை, கதையில் திருப்தியின்மை இப்படி பல காரணங்களால் நடிகர், நடிகைகள் நடிக்க மறுத்த எத்தனையோ படங்கள் ஹிட் கொடுத்திருக்கின்றன.
அப்படி ஒரு ஹிட் படத்தில் நடிக்க முடியாமல் போன படம் பற்றி இப்போது நடிகை ஷோபனா பேசியிருக்கிறார். அதில் நான் நிறைய ஹிட் படங்களை மிஸ் பண்ணியிருக்கிறேன். அதில் ஒரு படம் தான் கரகாட்டக்காரன். அதில் நான் நடிக்க வேண்டியது. அதில் டான்ஸ் இருந்தது. அதனால் என்னால், அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதே போன்று தான் மலையாளத்திலும் திரிஷ்யம் படத்தில் நடிக்க வேண்டியது. அந்த படத்தின் கதையை கூட எனக்கு அனுப்பிவச்சாங்க.
Karakattakaran
அப்போது நான் வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அதனால், நான் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, சந்தான பாரதி, சந்திரசேகர், கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, காந்திமதி ஆகியோர் பலர் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் கரகாட்டக்காரன். இந்தப் படத்தின் பாடலும், டயலாக்கும், காமெடி, காதல் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை வியக்க வைத்தது.
Shobana Gives Explanation about why She Miss Karakattakkaran Movie
இந்தப் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழம் காமெடி காட்சியாக இருந்தாலும் சரி, சொப்பன சுந்தரிய இப்போ யார் வச்சிருக்காங்க என்ற காட்சியாக இருந்தாலும் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இது கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் இணைந்து நடித்த படம் 100ஆவது படம். முத்தையா (ராமராஜன்) ஒரு கிராமத்தில் இருந்து வந்த கரகாட்டம் குழுவின் முன்னணி நடிகர். இதே போன்று காமாட்சியும் (கனகா) அருகிலுள்ள கிராமத்தில் கரகாட்டம் டான்ஸ் ஆடக் கூடியவர்.
Ramarajan Filmography
இவர், தன்னுடைய கிராமத்தின் கோயில் திருவிழாவில் டான்ஸ் ஆடுவார். அந்த கிராமத்தின் பஞ்சாயத்து போர்டு தலைவர் சின்னராசு. அவருக்கு காமாட்சி மீது ஒரு கண்ணு. ஆனால், காமாட்சிக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக காமாட்சியை பழிவாங்க முத்தையாவை ஊர் திருவிழாவிற்கு கரகாட்டம் ஆட வரவழைக்கிறார்.
முத்தையாவும் சிறப்பாக கரகாட்டம் ஆடி மக்களை ரசிக்க வைக்கிறார். முத்தையாவின் நடனம் காமாட்சிக்கு பிடித்து போக அவர் மீது காதல் கொள்கிறாள். காமாட்சியின் தந்தை முத்தையாவை பாராட்ட தன்னுடைய வீட்டிற்கு அழைக்கிறார். இதில் அதிர்ச்சி என்னவென்றால் முத்தையா தன்னுடைய அக்கா மகன் என்பதை புரிந்து கொள்கிறார். முத்தையாவும் காமாட்சியும் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்படுகிறார்கள். இதையறிந்த சின்னராசு அவர்களை பிரிக்க திட்டமிடுகிறார். இறுதியில் அவர்களது காதல் ஒன்று சேர்ந்ததா, பிரிந்திருந்த குடும்பம் மீண்டும் இணைந்ததா இல்லையா என்பது தான் படத்தோட மீதிக் கதை.
Karakattakkaran Movie 425 Days Running
நம்ம ஊரு நல்ல ஊரு படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான ராமராஜனுக்கு எங்க ஊரு பாட்டுக்காரன், நேரம் நல்லா இருக்கு, ராசாவே உன்னை நம்பி, எங்கள் ஊரு காவல்காரன் என்று ஆரம்பத்தில் 20 படங்களில் நடித்துள்ளார். அப்போது தான் ராமராஜனுக்கு கரகாட்டக்காரன் படம் வந்தது. இந்தப் படம் கொடுத்த வரவேற்பு அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
ராமராஜனின் புகழ் பட்டி தொட்டியெங்கும் பரவியது. கரகாட்டக்காரனை மிஞ்ச எந்தப் படமும் இல்லை. அந்தளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம். ஒரு வருடத்திற்கும் மேலாக 425 நாட்கள் ஓடிய படம் என்ற வரலாற்று சாதனையை இந்தப் படம் படைத்தது. இப்படிப்பட்ட ஒரு படத்தில் ஷோபனா நடிக்காமல் விட்டது அவருக்கு பெரும் இழப்பு தான் என்றே சொல்ல வேண்டும்.