விக்ரமுக்கு தேசிய விருது கொடுத்த பிதாமகன் படத்தில் சூர்யா நடித்த ரோல் என்னுடையது – கருணாஸ்!
Karunas Says that Pithamagan Suriya Role : பிதாமகன் படத்தில் சூர்யா நடித்த ரோலில் முதலில் நான் நடிக்க வேண்டியது என்று நடிகர் கருணாஸ் கூறியிருக்கிறார்.
Pithamagan, Karunas Says that Pithamagan Suriya Role
Karunas Says that Pithamagan Suriya Role : விக்ரம் நடிப்பில் வந்து அவருக்கு தேசிய விருது பெற்று கொடுத்த படம் தான் பிதாமகன். இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா, கருணாஸ், மனோபாலா ஆகியோர் பலர் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் பிதாமகன். ஒரு பெண் கல்லறையில் பிரசவிக்கும் போது ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் உயிரிழந்து விடுகிறார். அந்த குழந்தை சித்தன் கல்லறை பராமரிப்பாளரால் வளர்க்கப்படுகிறார். ஆனால், அவனுக்கு மனித தொடர்பு என்பது ரொம்பவே குறைவு தான். அதனால், அவன் யாரிடமும் பேசுவதில்லை. இன்பம், துன்பம் எதுவும் இல்லை.
Vikram Pithamagan Movie
ஒரு கட்டத்தில் உணவு தேடி நகரத்திற்கு செல்கிறார். அங்கு சிக்கலில் சிக்கும் போது கஞ்சா வியாபாரியான கோமதி (சங்கீதா) காப்பாற்றுகிறார். போதைப்பொருள் கடத்தும் தலைவனிடம் வேலைக்கு சேர்த்து விடுகிறாள். அங்கு போலீஸ் சோதனையின் போது சித்தன் போலீசாரால் கைது செய்யப்படுகிறார். இதே போன்று ஏமாற்று வேலைகளை செய்து வரும் சக்தி (சூர்யா) மஞ்சுவால் (லைலா) சிறைக்கு செல்கிறார். அங்கு சித்தனை சந்தித்து அவனை பாதுகாக்கிறார்.
இருவரும் நண்பர்களாகின்றனர். அதன் பிறகு நடக்கும் கதைகள் தான் படத்தின் மீதி கதை. ஆக்ஷன் க்ரைன் கதையை மையப்படுத்திய இந்தப் படம் விக்ரமிற்கு மட்டுமின்றி சூர்யாவிற்கும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. கடந்த 2003 ஆம் ஆண்டு அஜித்தின் ஆஞ்சநேயா, விஜய்யின் திருமால், அர்ஜூனின் ஒற்றன் ஆகிய படங்களுக்கு போட்டியாக இந்தப் படம் திரைக்கு வந்து ஹிட் கொடுத்தது.
Suriya and Vikram, Pithamagan Movie
அதோடு சிறந்த நடிகருக்கான தேசிய விருது விக்ரமுக்கு பெற்றுக் கொடுத்தது. தமிழ்நாடு மாநில அரசு விருதும் சிறந்த நடிகருக்காக விக்ரமுக்கு கிடைத்தது. சிறந்த நடிகைக்கு லைலாவிற்கு பெற்றுக் கொடுத்தது. சிறந்த இயக்குநர் பாலா, சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த நடிகை லைலா, சிறந்த துணை நடிகர் சூர்யா, சிறந்த துணிஅ நடிகை சங்கீதா ஆகியோருக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது.
இப்படி பல விருதுகளை பெற்று கொடுத்த பிதாமகன் படம் குறித்து கருணாஸ் கூறியிருக்கிறார். இதில், சூர்யா நடித்த ரோலில் நான் நடிக்க வேண்டியது. சூர்யா நடித்த ரோலுக்கு தான் என்னை கூப்பிட்டாங்க. ஆனால், சூர்யாவையே அந்த ரோல் நடிக்க வைத்தார்கள் என்று கருணாஸ் கூறியுள்ளார். இந்தப் படம் மட்டுமின்றி பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஏனென்றால் படத்திற்கு இசை இளையராஜா.
Actor Karunas, Pithamagan
விக்ரம் தமிழ் சினிமாவின் ஆரம்பகாலகட்டங்களில் தோல்வி படங்களை கொடுத்த நிலையில் இந்தப் படம் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. நந்தாவில் லொடுக்கு பாண்டியாக அறிமுகமான கருணாஸ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்தார். எனினும், எந்த படமும் அவருக்கு பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. இருந்தாலும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். இந்த 2024 ஆம் ஆண்டு கருணாஸ் நடித்த ரெபெல், போகுமிடம் வெகு தூரமில்லை, கங்குவா, சொர்க்கவாசல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகர் மட்டுமின்றி பின்னணி பாடகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கருணாஸின் மகன் கென் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அதுவும் வெற்றிமாறன் இயக்கத்தில் வரும் படங்களில் எல்லாம் அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் திரைக்கு வந்த விடுதலை பார்ட் 2 படத்தில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.