கிளாமர் சலிச்சு போச்சா? ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்... சேலைக்கட்டி மயக்கும் ரம்யா பாண்டியனின் கியூட் போட்டோஸ்!
கிளாமர் உடைகளில், போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கும் ரம்யா பாண்டியன் தற்போது, வெள்ளை நிற சேலையில்... கவர்ச்சிக்கு இடம் கொடுக்காத வகையில் வெளியிட்டுள்ள கியூட் போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில், 'டம்மி டப்பாசு' படத்தின் மூலம் நடிகை ரம்யா பாண்டியன் அறிமுகமாகி இருந்தாலும், இவரை ரசிகர்கள் முன்பு சிறந்த நடிகையாக அறிய செய்தது, இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான, 'ஜோக்கர்' திரைப்படம் தான்.
இந்த படத்தில் இவர் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும், இவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து... அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய ரம்யா பாண்டியன் கதை தேர்வு சரியாக அமையாததால் மீண்டும் பின்தங்கினார்.
திருமண நிகழ்ச்சியில் பட்டு வேஷ்டி, சட்டையில் கமல் ஹாசன், அக்ஷய் குமார், அமீர் கான்!
கவர்ச்சியை கையில் எடுக்க முடிவு செய்த ரம்யா பாண்டியன், தன்னுடைய இடுப்பு... மடிப்பு தெரியும் குதூகல மொட்டை மாடி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட, சமூக வலைத்தளமே இவர் காட்டிய கவர்ச்சியில் கொழுந்து விட்டு எரிந்தது.
பின்னர் அதிரடியாக விஜய் டிவி தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் இதில் தன்னுடைய சமையல் திறமையை மட்டும் இன்றி, காமெடி சென்ஸையும் பல முறை வெளிப்படுத்தினார்.
வடிவேலுவை தொடர்ந்து பிரபல காமெடி நடிகர் நடிக்க தடையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்!
பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்க ரம்யா பாண்டியன் 100 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில், இரண்டாவது ரன்னர்அப்பாக வெளியேறினார்.
தற்போது தமிழை தாண்டி மலையாள திரையுலகிலும் கவனம் செலுத்தி வரும் ரம்யா பாண்டியன், கூடுதல் கவனத்துடன் படத்தின் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில், வெள்ளை நிற சேலையில், ஓவர் கிளாமர் காட்டாமல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.