- Home
- Cinema
- 25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
படையப்பா படம் ரிலீஸ் ஆனதில் இருந்து 25 ஆண்டுகளாக அப்படத்தை தியேட்டரில் பார்க்காமல் இருந்து வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன், தற்போது ரீ-ரிலீஸ் ஆனபோது முதன்முறையாக பார்த்து ரசித்துள்ளார்.

Ramya Krishnan Watch Padayappa First Time
25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12ந் தேதி படையப்பா மறுவெளியீடு செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக கடந்த 2017-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சில திரையரங்குகளில் படையப்பா மீண்டும் வெளியிடப்பட்டது. அப்போது டிசம்பர் 11-ம் தேதி வெளியானது. அப்போது ரீ-ரிலீஸ் படங்களுக்கு பெரியளவில் மவுசு இல்லாததால், படையப்பா படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் சென்றது.
நீலாம்பரி vs படையப்பா
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ல் வெளியான படையப்பா திரைப்படம் ஆக்ஷன், எமோஷன், மாஸ் என அனைத்தும் கலந்த ஒரு பக்கா கமர்ஷியல் படமாக இருந்தது. இப்படத்தின் முக்கிய ஹைலைட் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா கதாபாத்திரமும் தான். இருவரும் இணைந்து நடித்த காட்சிகளும், வசனங்களும் காலம் கடந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளன. படையப்பா படத்தில் சௌந்தர்யா, சிவாஜி கணேசன், நாசர், லட்சுமி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
படையப்பா படம் பார்க்காமல் இருந்த ரம்யா கிருஷ்ணன்
படையப்பா படம் 1999-ம் ஆண்டு ரிலீஸ் ஆன சமயத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஏனெனில் ரஜினிகாந்துக்கு வில்லையாக நடித்திருந்ததால், சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணனை கடுமையாக விமர்சித்திருந்தனர். இதன் காரணமாகவே அப்படத்தை அந்த சமயத்தில் தியேட்டரில் பார்க்காமல் தவிர்ந்து வந்தார் ரம்யா கிருஷ்ணன். படையப்பா ரிலீஸ் சமயத்தில் சில நாட்கள் அவர் ஊரிலேயே இல்லை என்றும் கூறப்பட்டது.
முதன்முறையாக பார்த்த வீடியோ வைரல்
படையப்பா படம் வெளியான 1999-ம் ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு பயந்து அப்படத்தை நடிகை ரம்யா கிருஷ்ணன் தியேட்டரிலேயே பார்க்கவில்லையாம். அதன்பின்னர் தியேட்டரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போது 25 ஆண்டுகளுக்கு பின் அப்படம் ரீ-ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், தற்போது முதன்முறையாக படையப்பா படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்து ரசித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். தியேட்டரில் முதன்முறையாக படையப்பா படத்தை பார்த்த போது எடுத்த வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

