மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
பிளாக்பஸ்டர் படமான 'படையப்பா' மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்றும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Rajinikanth opens Up About Padayappa 2
1999-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் படையப்பா. ரஜினிகாந்தின் படையப்பா என்ற கதாபாத்திரமும், ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி என்ற வில்லி கதாபாத்திரமும் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக அமைந்தன. இன்றும் இந்தப் படத்திற்கும், கதாபாத்திரங்களுக்கும், வசனங்களுக்கும் ரசிகர்கள் ஏராளம். தற்போது படையப்பா மீண்டும் ரிலீஸ் ஆக தயாராகி வருகிறது. இந்த நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசியுள்ளார். அத்துடன் அதன் டைட்டில் குறித்து ஹிண்ட் கொடுத்துள்ளார்.
படையப்பா 2 டைட்டில் என்ன?
அதுகுறித்து ரஜினி பேசியதாவது : "எனது 50 வருட சினிமா வாழ்க்கையில், தியேட்டர் கேட்டையெல்லாம் உடைத்துக்கொண்டு பெண்கள் வந்து பார்த்த ஒரே படம் படையப்பா தான். 2.0, ஜெயிலர் 2 எல்லாம் வந்த நேரத்தில், ஏன் படையப்பா 2 செய்யக்கூடாது என்ற எண்ணம் எனக்கு வந்தது. அடுத்த ஜென்மத்தில் உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று நீலாம்பரி கூறுவார். அதுபோல படத்தின் பெயர் நீலாம்பரி - படையப்பா 2. கதை குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன. எல்லாம் நல்லபடியாக அமைந்தால், படையப்பா போன்ற ஒரு படம் உருவாகும். ரசிகர்களுக்கு அது திருவிழாவாக இருக்கும்", என்று ரஜினிகாந்த் கூறினார்.
ரஜினி சொன்ன சீக்ரெட்
தொடர்ந்து பேசிய அவர் "நான்தான் என்னுடைய நண்பர்களை வைத்து படையப்பாவை தயாரித்தேன். எந்த ஒரு ஓடிடி அல்லது சாட்டிலைட் நிறுவனத்திற்கும் இந்தப் படத்தை நான் கொடுக்கவில்லை. சன் டிவிக்கு இரண்டு முறை கொடுத்தேன். மற்றபடி வேறு எதுவும் இல்லை. மக்கள் திரையரங்கில் கொண்டாட வேண்டிய படம் அது. இறுதியில் எனது சினிமா வாழ்க்கையின் 50-வது ஆண்டில் இதை வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தேன்", என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். ரீ-ரிலீஸ் தொடர்பாக வெளியிடப்பட்ட புதிய வீடியோவில் தான் நடிகர் ரஜினிகாந்த் இந்த தகவலை வெளியிட்டார்.
ரீ-ரிலீஸ் ஆகும் படையப்பா
டிசம்பர் 12-ம் தேதி படையப்பா மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறது. ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ல் வெளியான படம் படையப்பா. ஆக்ஷன், எமோஷன், மாஸ் என அனைத்தும் கலந்த இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன், நாசர், லட்சுமி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

