K S Ravikumar Salary for Padayappa Movie in Tamil : ரஜினியின் படையப்பா படத்திற்கு அந்த படத்தின் இயக்குநரான கேஎஸ் ரவிக்குமாருக்கு எத்தனை கோடி சம்பளம் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

K S Ravikumar Salary for Padayappa Movie in Tamil : தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். 170க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தில் இடம் பெற்ற சிக்கிட்டு என்ற பாடல் லிரிக் வீடியோ வெளியானது. இந்தப் பாடலை டி ராஜேந்தர், அனிருத் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், ரெபே மோனிகா ஜான், காளி வெங்கட், மோனிஷா பிளெசி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அமீர் கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, பூஜா ஹெக்டே ஐட்டம் பாடல் ஒன்றிற்கு டான்ஸ் ஆடியிருக்கிறார்.

இந்த நிலையில் தான் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா படம் திரைக்கு வந்து 26 ஆண்டுகள் ஆகிறது. ரஜினிகாந்த் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களில் படையப்பா படமும் ஒன்று. ரம்யா கிருஷ்ணனுக்கு நீலம்பரி என்ற ஒரு அடையாளத்தையும் ரஜினிக்கு படையப்பா என்ற ஒரு அங்கீகாரத்தையும் கொடுத்த படம் தான் இந்தப் படம்.

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவாஜி கணேசன், மணிவண்ணன், நாசர், சவுந்தர்யா, ராதாராவி,செந்தில், ரமேஷ் கண்ணா என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கடந்த 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான இந்தப் படம் திரைக்கு வந்து 26 ஆண்டுகள் கடந்துவிட்டது.

26 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தின் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாருக்கு இந்தப் படத்திற்காக எத்தனை கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி 26ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் படத்திற்கு கேஎஸ் ரவிக்குமாருக்கு ரூ.65 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணத்தை கொண்டு தான் கேஎஸ் ரவிக்குமார் ஒரு இடம் வாங்கி இருக்கிறார். அந்த இடத்தில் தான் அவர் பிரம்மாண்டமான வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி அந்த காலத்திலேயே இந்தப் படம் ரூ.58 கோடி வசூல் குவித்திருக்கிறது. ஒருவேளை இந்தப் படம் இன்று காலகட்டத்திற்கு ஏற்ப எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டிருந்தால் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்திருக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அது உண்மையாக கூட இருக்கலாம். கூடிய விரைவில் ரஜினியின் படையப்பா ரீ ரிலீஸ் செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.