நடிகை சௌந்தர்யாவை நினைத்து டிவி நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட ரம்யா கிருஷ்ணன்!
Ramya Krishnan breaks down in tears: நடிகை ரம்யா கிருஷ்ணன், மறைந்த நடிகை சௌந்தர்யாவின் நினைவுகளை டிவி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டபோது கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

சௌந்தர்யா பற்றி மனம் திறந்த ரம்யா கிருஷ்ணன்:
தமிழ் சினிமாவில், 90-களில் முன்னணி நடிகையாக இருந்தவர்கள் தான் சௌந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன். இருவரும் இணைந்து, அம்மன், படையப்பா போன்ற சில தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக பணியாற்றி உள்ளனர். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மொழி படங்களிலும் இருவரும் ஒன்றாக பணியாற்றி உள்ளனர். நல்ல தோழிகளாக இருவரும் இருந்தனர். இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் சௌந்தர்யா பற்றிய சில விஷயங்களை டிவி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஜெகபதி பாபுவின் நிகழ்ச்சி:
பிரபல நடிகர் ஜெகபதி பாபு தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் டாக் ஷோ ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு, ஜெகபதி பாபுவின் வேடிக்கையான கேள்விகளுக்கும், எமோஷ்னனால கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட நடிகை மீனாவிடம், ஜெகபதி பாபு... சொந்தர்யா உடனான அவருடைய நட்பு பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்.
மீனா கூறிய தகவல்:
அப்போது மீனா, சௌந்தர்யா பயணித்த விமானத்தில் நானும் செல்வதாக இருந்தது. ஆனால் அவர் அரசியல் பணி காரணமாக செல்வதால், நான் ஷூட்டிங் உள்ளது என்று பொய் சொல்லிவிட்டேன் என கூறிய தகவல் வைரல் ஆனது. இதை தொடர்ந்து ரம்யா கிருஷ்ணனிடமும் சௌந்தர்யா பற்றி ஜெகபதி பாபு பேசி உள்ளார். இந்த உரையாடலின் போது, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சொந்தர்யா இணைந்து நடித்த... 'படையப்பா ' திரைப்படத்தின் காட்சி திரையிடப்பட்டது.
கண்ணீர் விட்டு அழுத ரம்யா கிருஷ்ணன்:
அதை பார்த்ததும் ரம்யா கிருஷ்ணன் கண்ணீர் விட்டு அழ துவங்கி விட்டார். பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேச துவங்கிய அவர், " சவுந்தர்யா ஒரு குழந்தை போன்றவர். மிகவும் அப்பாவி பெண்ணாக இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஒரு இளம் தேவதையாக உருவாக்கி கொண்டார். அவரின் வளர்ச்சியை பக்கத்தில் இருந்து பார்த்தவள் நான். அதே போல் தன்னுடைய புகழ் எப்போதுமே தன்னை மாற்றிவிட கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார். சொந்தர்யா தனக்கு உண்மையிலேயே சிறந்த தோழி. மிகவும் மனித நேயம் கொண்ட பெண் என கூறினார்.
20 வருடங்கள் ஆகியும் ரசிகர்கள் மனதில் வாழும் சௌந்தர்யா:
சொந்தர்யா முன்னணி ஹீரோயினாக இருக்கும் போதே, தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த 2004ல் அரசியல் பிரச்சாரத்திற்காக விமானத்தில் சென்றபோது, இவர் சென்ற விமானம் இயந்திர கோளாறு காரணமாக நடு வானில் வெடித்து சிதறியது. இந்த விபத்தில், சௌந்தர்யாவுடன் பயணித்த அவரது சகோதரரும் உயிரிழந்தார். சௌந்தர்யா மறைந்து 20 வருடங்களுக்கு மேல் ஆன போதும், இவரது நினைவுகள் தற்போது வரை ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.