- Home
- Cinema
- கே.எஸ்.ரவிக்குமாரால் துப்பாக்கியில் சுடப்பட்ட ரம்யா கிருஷ்ணனின் தாயார்! நூல் இடையில் உயிர் தப்பிய சம்பவம்!
கே.எஸ்.ரவிக்குமாரால் துப்பாக்கியில் சுடப்பட்ட ரம்யா கிருஷ்ணனின் தாயார்! நூல் இடையில் உயிர் தப்பிய சம்பவம்!
பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணனின் தாயாரை துப்பாக்கியால் சுட்டு அவர் காயமடைந்த பழைய சம்பவம் குறித்த தகவல், தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பப்பட்டு வருகிறது.

இது வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட விஷயம் கிடையாது என்றாலும், விளையாட்டு விபரீதமாக மாறியுள்ளது. நடிகர் நாகேஷ் தன்னுடைய மகன் ஆனந்தபாபுவை வைத்து 1985 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் 'பார்த்த ஞாபகம் இல்லையோ'. இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஆனந்த பாபு ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் இந்த திரைப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நாகேஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று நாகேஷின் வீட்டில் தான் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி அவருடைய வீட்டில் நடந்த போது, நாகேஷின் இளைய மகனுடன் கே.எஸ் .விக்குமார் விளையாடிக் கொண்டிருந்தார்.
மேலும் செய்திகள்: 'ஜெயிலர்' படப்பிடிப்பின் போது 'ஜவான்' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விசிட் அடித்த ரஜினி! ஷாருக்கானுடன் நடந்த சந்திப்பு
அப்போது பொம்மை துப்பாக்கியில் ஈயத்தால் செய்யப்பட்ட புல்லட்டை கொண்டு இருவரும் சுட்டு.. சுட்டு... விளையாடிக் கொண்டிருந்தனர். ரம்யா கிருஷ்ணனுடன் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்த அவரது தாயார், கே.எஸ்.ரவிக்குமாரிடம் தன்னுடைய கையை சரியாக குறி பார்த்து சுடும்படி கூறியுள்ளார். அவரும் ஜாலியாக குறி பார்த்து சுட, குறித்த தவறி அவரது தோள்பட்டையில் அந்த விளையாட்டு துப்பாக்கியில் போடப்பட்ட குண்டு பாய்ந்தது.
குண்டு அவரது தோள் பட்டையில் பதிந்து ரத்தம் வழிய துவங்கியது. வழியால் அவதிப்பட்ட ரம்யா கிருஷ்ணனின் தாயாரை ஆனந்த பாபு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளார். பின்னர் அவரது தோள் பட்டையில் பாய்ந்த குண்டையும் மருத்துவர்கள் நீக்கி, சிகிச்சை அளித்தனர்.
மேலும் செய்திகள்: ரெட் வெல்வட் கேக் போல்... ஆண்டி வயதிலும் குட்டை கவுனில் கும்முனு போஸ் கொடுத்த கிரண்..! கிக் ஏற்றும் ஹாட் கிளிக
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க போலீசாரும் அப்போது அவருடைய வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் ரம்யா கிருஷ்ணனின் தாயார் இது விளையாட்டாக நடந்த சம்பவமே தவிர, இதில் எது உள்நோக்கமும் இல்லை என தெளிவுபடுத்திய பின்னர் போலீசார் இந்த விவகாரத்தை கைவிட்டுள்ளனர்.
விளையாட்டு வினையான இந்த சம்பவம் 1985 ஆம் ஆண்டு நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் கேஸ் ரவிக்குமார் இயக்கத்திலேயே ரம்யா கிருஷ்ணன் 'படையப்பா' போன்ற படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: சிம்புவை தொடர்ந்து இயக்குநர் கெளதம் மேனன் அடுத்த ஹீரோ யார் தெரியுமா? உறுதியான தகவல்..!