MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தனுஷுடன் மோதும் ராம்சரண்... கிளாஷுக்கு ரெடியான கர vs பெத்தி..!

தனுஷுடன் மோதும் ராம்சரண்... கிளாஷுக்கு ரெடியான கர vs பெத்தி..!

புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள பெத்தி திரைப்படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில், அதனை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைத்து உள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 05 2026, 11:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Peddi Movie New Release Date
Image Credit : X

Peddi Movie New Release Date

நடிகர் ராம் சரண் நடிக்கும் பான்-இந்திய திரைப்படமான 'பெத்தி' படத்தின் உலகளாவிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் ஏப்ரல் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக 2026 மார்ச் கடைசி வாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற புச்சி பாபு சனா இயக்கும் இந்தப் படத்தை விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார்.

24
ராம்சரணின் பெத்தி
Image Credit : X/@vriddhicinemas

ராம்சரணின் பெத்தி

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து இந்த பிரம்மாண்ட பட்ஜெட் படத்தை வழங்குகின்றனர். ஜான்வி கபூர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில், இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஜெகபதி பாபுவின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் அப்பலசூரி என்ற கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு நடிக்கிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Related Articles

Related image1
காத்துவாங்கும் தளபதி கச்சேரி... ஜனநாயகன் பாடலை அடிச்சுதூக்கி ராம் சரணின் பெத்தி படைத்த சாதனை..!
Related image2
ரிலீஸ் தேதியை லாக் பண்ணிய தனுஷின் ‘கர’ திரைப்படம்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
34
பிரம்மாண்டமாக உருவாகும் பெத்தி
Image Credit : MythriMovieMakers\Twitter

பிரம்மாண்டமாக உருவாகும் பெத்தி

ராம் சரண் - சிவராஜ் குமார் கூட்டணி முதன்முறையாக இணையும் படம் இதுவாகும். பாலிவுட் சண்டை பயிற்சியாளர் ஷியாம் கௌஷல் மேற்பார்வையில், ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு உள்ளது. இந்த சண்டைக் காட்சியில் ராம் சரண் மற்றும் சிவராஜ் குமார் பங்கேற்றனர். இயக்குனர் புச்சி பாபு சனா, சண்டைக் காட்சிகள் உட்பட படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மிக நுணுக்கமாக பிரம்மாண்டமாக உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

44
கர vs பெத்தி
Image Credit : X

கர vs பெத்தி

இப்படத்தின் "சிகிரி சிகிரி" என்ற பாடல் ஏற்கனவே உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் கிளிம்ப்ஸ் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தன. பாலிவுட் நடிகர் திவ்யேந்து சர்மா இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் பெத்தி திரைப்படமும் ஒன்று, அப்படத்தின் மூலம் ராம்சரண் கம்பேக் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். நடிகர் தனுஷின் கர படமும் அதே ஏப்ரல் 30ந் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராம் சரண்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தேவசகாயம் கிட்னி திருடனா? ஜனனிக்கு வந்த டவுட்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தடம் மாறும் கதைக்களம்
Recommended image2
ரோகிணியின் திருவிளையாடல் ஆரம்பம்... சீதாவை அடிச்சு துரத்திய அருண் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image3
குதூகலமாக இருந்த கதிர் - ராஜி... வயித்தெறிச்சலில் திட்டிய கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Related Stories
Recommended image1
காத்துவாங்கும் தளபதி கச்சேரி... ஜனநாயகன் பாடலை அடிச்சுதூக்கி ராம் சரணின் பெத்தி படைத்த சாதனை..!
Recommended image2
ரிலீஸ் தேதியை லாக் பண்ணிய தனுஷின் ‘கர’ திரைப்படம்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved