- Home
- Cinema
- காத்துவாங்கும் தளபதி கச்சேரி... ஜனநாயகன் பாடலை அடிச்சுதூக்கி ராம் சரணின் பெத்தி படைத்த சாதனை..!
காத்துவாங்கும் தளபதி கச்சேரி... ஜனநாயகன் பாடலை அடிச்சுதூக்கி ராம் சரணின் பெத்தி படைத்த சாதனை..!
ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் பெத்தி படத்தின் சிக்கிரி பாடலுக்கு கிடைத்த வரவேற்பை விட ஜன நாயகன் படத்திற்காக விஜய் பாடிய தளபதி கச்சேரி பாடலுக்கு கம்மியான ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.

Chikiri vs Thalapathy Kacheri Song
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருவது அனிருத் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் தான். இவர்கள் இருவருமே தற்போது பான் இந்தியா அளவில் பிசியான இசையமைப்பாளர்களாக உள்ளனர். அனிருத் கைவசம் தமிழில் விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைத்து தமிழ் டாப் ஹீரோஸ் படங்களையும் கைவசம் வைத்துள்ளதோடு, தெலுங்கில் ஒரு படம், இந்தியில் ஷாருக்கானின் கிங் திரைப்படம் என செம பிசியாக உள்ளார். ஏ.ஆர்.ரகுமானும் தமிழில் சில படங்கள், தெலுங்கில் ராம் சரணின் பெத்தி, இந்தியில் தனுஷ் நடிக்கும் தேரே இஸ்க் மெயின் என அனிருத்துக்கு டஃப் கொடுத்து வருகிறார்.
தளபதி கச்சேரி பாடல்
அனிருத் இசையமைத்துள்ள விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தில் இருந்து தளபதி கச்சேரி என்கிற பாடல் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இப்பாடலை விஜய்யுடன் சேர்ந்து அனிருத்தும் பாடி இருந்தார். தளபதி விஜய் பாடிய கடைசி பாடல் என்பதால் இதை ஒரு கொண்டாட்ட பாடலாக படமாக்கி இருந்தனர். இதில் விஜய்யுடன் சேர்ந்து பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜு ஆகியோரும் நடனமாடி இருக்கிறார்கள். இப்பாடல், யூடியூப்பில் வெளியாகினாலும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
சிக்கிரி பாடல்
ஜன நாயகனுக்கு போட்டியாக ராம்சரண் நடிக்கும் பெத்தி திரைப்படத்தில் இருந்து சிக்கிரி என்கிற பாடல் வெளியிடப்பட்டு இருந்தது. இப்பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஏ.ஆர்.ரகுமான் தெலுங்கில் இசையமைத்துள்ள பாடல் இது என்பதால் இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பாடலும் அமைந்திருந்ததால், ரிலீஸ் ஆன முதல் நாளே யூடியூப்பில் செம வைரல் ஆனது.
தளபதி கச்சேரியை விட அதிக வியூஸ் அள்ளிய சிக்கிரி
யூடியூப்பில் வெளியான முதல் நாளில் அதிக வியூஸ் அள்ளிய தென்னிந்திய பாடல் என்கிற சாதனையை சிக்கிரி பாடல் படைத்துள்ளது. அப்பாடல் வெளியான 24 மணிநேரத்தில் 2.9 கோடி பார்வைகளை பெற்றிருந்தது. ஆனால் விஜய்யின் ஜன நாயகன் பட தளபதி கச்சேரி பாடல் ரிலீஸ் ஆன 24 மணிநேரத்தில் வெறும் 1.2 கோடி வியூஸ் மட்டுமே பெற்றிருக்கிறது. இருப்பினும் சிக்கிரி பாடலை விட ஜன நாயகனின் தளபதி கச்சேரி பாடலுக்கு தான் அதிக லைக்ஸ் கிடைத்திருந்தது. சிக்கிரி பாடல் 7 லட்சம் லைக்ஸ் கூட பெறவில்லை. ஆனால் தளபதி கச்சேரி பாடல் 10 லட்சத்திற்கும் மேல் லைக்ஸ் அள்ளி இருந்தது.