- Home
- Cinema
- நடிகர் வடிவேலுவுக்கு சொந்த ஊரில் எழுந்த எதிர்ப்பு! பத்தி எரியும் குலதெய்வ கோயில் பிரச்சனை!
நடிகர் வடிவேலுவுக்கு சொந்த ஊரில் எழுந்த எதிர்ப்பு! பத்தி எரியும் குலதெய்வ கோயில் பிரச்சனை!
பிரபல காமெடி நடிகர் வடிவேலு, மக்கள் நிர்வகித்து வரும் அவரின் குலதெய்வ கோவில் விவகாரத்தில், ஊர் மக்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல் பரம்பரை அறைக்காவலர் என்கிற பதவியை உருவாக்க முயன்று வருவதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சர்ச்சையில் சிக்கிய நடிகர் வடிவேலு:
தமிழ் சினிமாவில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், காமெடி நடிகராகவும் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து பிரபலமானவர் வடிவேலு. ரெட் கார்டு சர்ச்சைக்கு பின்னர் மீண்டும் தன்னுடைய சினிமா கேரியரில் வளர்ச்சியை எட்டிப் பிடித்துள்ள வடிவேலு, அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி நடித்து வருகிறார். குறிப்பாக 2023 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் காமெடி நடிகர் என்பதை தாண்டி ஒரு குணச்சித்திர நடிகராகவும் வடிவேலு ரசிகர்களால் பார்க்கப்பட்டார்.
வடிவேலு நடித்து வரும் படங்கள்:
இதைத்தொடர்ந்து வெறும் காமெடியனாக மட்டுமே வந்து செல்லும் கதாபாத்திரங்களை தவிர்த்து, வலுவான கதாபாத்திரம் இருக்கும் திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் இவரின் கைவசம் தற்போது பகத் பாசில் நடித்துவரும் 'மாரீசன்' மற்றும் சுந்தர்சியுடன் காமெடி காமெடி படமாக உருவாகி உள்ள 'கேங்கர்ஸ்' படத்திலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள திரைப்படத்திலும் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கையில் தாலியை எடுத்த கார்த்திக்; வில்லன் சோலி முடிஞ்சிது - கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய அப்டேட்!
திருவேட்டை உடைய அய்யனார் கோவில்:
இந்நிலையில் நடிகர் வடிவேலு குறித்து வெளியாகி உள்ள ஒரு தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் வடிவேலுவின் சொந்த ஊர் மதுரை என்றாலும், இவருடைய குலதெய்வம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. அங்குள்ள காட்டு பரமக்குடி என்னும் ஒரு கிராமத்தில் திருவேட்டை உடைய அய்யனார் கோவில் தான் வடிவேலுவின் குலதெய்வம். ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலுக்கு அடிக்கடி செல்வதை வடிவேலு வழக்கமாக வைத்துள்ளார். மேலும் வடிவேலுவுக்கு இருக்கும் அந்தஸ்து காரணமாக. இந்த கோவிலில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் இவரிடம் ஊர்மக்கள் கலந்து ஆலோசித்த பின்னரே எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
வடிவேலு ஏற்படுத்திய புதிய பதவி:
வடிவேலுவும் இந்த கோவிலின் விரிவாக்கம் மற்றும் பிற பணிகளுக்கு பல உதவிகளை செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஊர் மக்களே நிர்வகித்து வரும் இந்த கோவிலை வடிவேலுவுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் அவரின் ஆதரவாளர் பாக்யராஜ் என்பவர் தனக்கு சொந்தமாக ஆக்கிக் கொள்ள முயற்சி செய்வதாக இப்போது அந்த கிராமத்தில் உள்ள மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த கோவிலில் இத்தனை வருடங்கள் இல்லாமல், இப்போது வடிவேலு பரம்பரை அரை காவலர் என்கிற ஒரு பொறுப்பை ஊர் மக்களின் ஆலோசனையை பெறாமல் உருவாக்கியுள்ளதாகவும், இந்த பொறுப்பு பாக்கியராஜ் என்பவருக்கு கொடுக்கப்பட இருப்பதாகவும் ஊர் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். யாரையும் கலந்து ஆலோசிக்காமல் வடிவேலு எடுத்துள்ள இந்த முடிவுக்கு அந்த ஊரு மக்கள் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாக சைதன்யாவின் பான் இந்தியா கனவில் விழுந்த மண்ணு; வசூலில் தத்தளிக்கும் தண்டேல்!
பாக்யராஜ் கொடுத்த விளக்கம்:
இந்த கோவிலின் பதவிகளுக்கு புதிய நபர்களை அவர்களே தேர்வு செய்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வடிவேலுவின் ஆதரவாளரான பாக்யராஜ் கூறும் போது, ஒரு சிலரின் தூண்டுதலால் நடக்கும் சம்பவம் இது. யாரும் கோவிலை கைப்பற்ற முயற்சிக்கவில்லை. வெளியூரை காரர்கள் சிலர் மக்களை வடிவேலு அண்ணன் மற்றும் எனக்கு எதிராக தூண்டி விட்டு இப்படி செய்ய சொல்வதாக கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும், இந்த கோவில் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சொந்த ஊர் மக்களே எதிர்ப்பு:
ஏற்கனவே பல பிரச்சனைகளில் சிக்கி இப்போதுதான் மெல்ல மெல்ல அதில் இருந்து மீண்டு வரும் வடிவேலு இப்போது தன்னுடைய குலதெய்வ விவகாரத்தில் சிக்கி, சொந்த ஊர் மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' முதல் விமர்சனம் கூறிய பிரபலம்; பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரா?