- Home
- Cinema
- Ram charan : என்ன ஒரு தங்கமான மனசு! RRR படக்குழுவினருக்கு 10 கிராம் தங்கக்காசு பரிசளித்தார் ராம்சரண்
Ram charan : என்ன ஒரு தங்கமான மனசு! RRR படக்குழுவினருக்கு 10 கிராம் தங்கக்காசு பரிசளித்தார் ராம்சரண்
Ram charan : ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் ராம்சரண், அப்படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்களுக்கு 10 கிராம் தங்கக்காசை பரிசாக அளித்துள்ளார்.

5 மொழிகளில் ஆர்.ஆர்.ஆர்
ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்த மாதம் 25-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது. சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராமராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது.
இப்படத்தில் கொமரம் பீமாக ஜூனியர் என்.டி.ஆரும், சீதாராம ராஜுவாக ராம்சரணும் நடித்திருந்தனர். வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஒலிவியா மோரிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மரகதமணி இசையமைத்துள்ள இப்படத்துக்கு செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரூ.800 கோடி வசூல்
வெளியானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டைய கிளப்பி வருகிறது. இப்படம் 9 நாட்களில் 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து உள்ளது. இன்னும் சில நாட்களில் இப்படத்தின் வசூல் ரூ.1000 கோடியை தாண்டிவிடும் என்றும் கூறப்படுகிறது.
தங்கக்காசு பரிசு
இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் ராம்சரண், அப்படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்களுக்கு 10 கிராம் தங்கக்காசை பரிசாக அளித்துள்ளார். அதில் ஒருபுரம் ஆர்.ஆர்.ஆர் எனவும் மறுபுறம் ராம்சரண் என அச்சிடப்பட்டு உள்ளது. ராம்சரணின் இந்த தங்கமான மனசுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... Vijay : குட்டி ஸ்டோரி ஸ்டாக் இல்ல நெல்சா.... ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் விஜய் கலகல பேச்சு- வைரலாகும் புரோமோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.