Asianet News TamilAsianet News Tamil

Vijay : குட்டி ஸ்டோரி ஸ்டாக் இல்ல நெல்சா.... ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் விஜய் கலகல பேச்சு- வைரலாகும் புரோமோ

vijay : விஜய் பங்கேற்றுள்ள நேர்காணல் நிகழ்ச்சிக்கு நேருக்கு நேர் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 10-ந் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது.

After 10 years Actor Vijay take part in interview for beast movie with director Nelson
Author
Tamil Nadu, First Published Apr 4, 2022, 6:27 AM IST

பீஸ்ட் ஆடியோ லாஞ்ச் இல்லை

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. வழக்கமாக விஜய் படம் ரிலீசாகும் சமயத்தில் அப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி நடத்தப்படும். அதில் நடிகர் விஜய் பேசும் பேச்சைக் கேட்கவே தனி ரசிகர் கூட்டமே உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து வந்தது.

விஜய்யுடன் நெல்சன் நடத்திய நேர்காணல்

ஆனால் பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை. கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் அந்நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக நடிகர் விஜய் பங்கேற்கும் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை படமாக்கி உள்ளனர். இந்நிகழ்ச்சியை பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் தான் தொகுத்து வழங்கி உள்ளார்.

After 10 years Actor Vijay take part in interview for beast movie with director Nelson

10 ஆண்டுகளுக்கு பின் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய்

கடைசியாக தலைவா படத்திற்காக நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய், தற்போது 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். விஜய் பங்கேற்றுள்ள நேர்காணல் நிகழ்ச்சிக்கு நேருக்கு நேர் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 10-ந் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது.

After 10 years Actor Vijay take part in interview for beast movie with director Nelson

வைரல் புரோமோ

இதற்கான புரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நடிகர் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை இயக்குனர் நெல்சன் கேட்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ‘ஏதாவது குட்டி ஸ்டோரி இருந்த சொல்லுங்க’ என நெல்சன் கேட்க, அதற்கு விஜய் ‘ஸ்டாக் இல்லப்பா’ என பதிலளிக்கிறார். பதிலுக்கு நெல்சன், ‘எங்கயாவது பாக்கெட்ல இருக்கும் தேடி பாருங்க சார்’ என கிண்டலடிக்கும் படியான காட்சிகள் இடம்பெற்று உள்ளன. 

இதையும் படியுங்கள்...  Beast : கில்லி மாதிரி சொல்லி அடிச்ச விஜய்... ஒரே நாளில் வலிமை, KGF 2 பட சாதனைகளை அடிச்சு தூக்கியது பீஸ்ட்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sun Pictures (@sunpictures)

Follow Us:
Download App:
  • android
  • ios