- Home
- Cinema
- Beast : கில்லி மாதிரி சொல்லி அடிச்ச விஜய்... ஒரே நாளில் வலிமை, KGF 2 பட சாதனைகளை அடிச்சு தூக்கியது பீஸ்ட்
Beast : கில்லி மாதிரி சொல்லி அடிச்ச விஜய்... ஒரே நாளில் வலிமை, KGF 2 பட சாதனைகளை அடிச்சு தூக்கியது பீஸ்ட்
Beast : வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் 23 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், பீஸ்ட் அதனை ஒரே நாளில் அடிச்சுதூக்கி உள்ளது.

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் டிரைலர் கடந்த ஏப்ரல் 2-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய இந்த டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும், மறுபுறம் கடும் விமர்சனத்தையும் சந்தித்தது. இது பார்ப்பதற்கு யோகிபாபுவின் கூர்கா படத்தை போல் உள்ளதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர்.
பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதிலும், யூடியூபில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது பீஸ்ட் டிரைலர். அதன்படி வெளியான 24 மணிநேரத்தில் பீஸ்ட் படத்தின் டிரைலர் 30 மில்லியன் பார்வைகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் வெளியான டிரைலர்களில் ஒரே நாளில் அதிக பார்வைகளை பெற்ற டிரைலராக பீஸ்ட் மாறியுள்ளது.
BEAST, VALIMAI
இதற்கு முன் பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் டிரைலர் 23.2 மில்லியன் பார்வைகளைப் பெற்றதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது பீஸ்ட் அதனை முறியடித்துள்ளது. அதேபோல் வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் 23 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், பீஸ்ட் அதனை ஒரே நாளில் அடிச்சுதூக்கி உள்ளது.
மறுபுறம் பீஸ்ட் படத்துக்கு போட்டியாக வெளியாகும் கே.ஜி.எஃப் 2 படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி ஒருவாரம் ஆகியும் இதுவரை 20 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. அதனையும் விஜய்யின் பீஸ்ட் பட டிரைலர் முறியடித்து உள்ளது. பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்...பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத சிம்பு... எல்லாத்துக்கும் காரணம் அந்த 2 பேர் தான்- வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.