சிரஞ்சீவி பேத்தியா இது? பட்டு பாவாடையில் கியூட்டாக இருக்கும் ராம் சரண் மகள்! முதல் முறையாக வெளியான புகைப்படம்!
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதியரின் மகள் க்ளின் காராவின் புகைப்படத்தை முதல் முறையாக உபாசனா வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Rajamouli and Ram Charan Film RRR
தெலுங்கில் அப்பா சிரஞ்சீவியை தொடர்ந்து, ஹீரோவாக களமிறங்கி கலக்கி கொண்டிருப்பவர் மகன் ராம் சரண். ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த 'RRR' திரைப்படம், ராம் சரணை பான் இந்தியா ஸ்டாராக மாற்றிய நிலையில், உலக அளவில் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் உருவானது. ஆர் ஆர் ஆர் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. ரூ.1000 கோடி வசூல் கிளப்பில் இணைந்த இந்த படம், திரையுலகினரும் வழங்கப்படும் மிகப்பெரிய விருதான கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதை பெற்று தென்னிந்திய திரையுலகை பெருமைப்பட வைத்தது.
Ram Charan starring RRR Movie
'RRR' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு தான் ஒரிஜினல் பாடல் என்கிற கேட்டகிரியில் கிடைத்து கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ராம் சரண், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும், 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. 'இந்தியன் 2' படத்தில் வெற்றியை தவறவிட்ட இயக்குனர் ஷங்கர் இந்த படத்தின் மூலம் விட்ட இடத்தை பிடிப்பார் என எதிர்பாக்கப்படுகிறது.
அல்லு அர்ஜுன் வீட்டின் மீது நடந்த தாக்குதல்; குழந்தைகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்!
Upasana Reveled Daughter Face
ராம் சரண் மற்றும் அவரின் குடும்பத்தினர் பற்றிய எந்த ஒரு தகவல் வெளியானாலும், அது தெலுங்கு திரையுலகில் மட்டும் அல்ல, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் கவனிக்கப்படுகிறது. அந்த வகையில் தான், ராம் சரணின் மகள் க்ளின் காரா முகத்தை ரிவீல் செய்யும் விதமாக உப்பாசனா வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Ram Charan Weds Upasana
கடந்த 2012-ம் ஆண்டு, நடிகர் ராம் சரண் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பிரதாப் ரெட்டியின் பேத்தியான உபாசனா காமினேனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சுமார் 10 ஆண்டுகள், குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை இருவருமே தள்ளி போட்டனர். அதே நேரம் உப்பாசனா மருத்துவ துறையில் இருப்பதால், தன்னுடைய கருமுட்டையை சேமித்து வைத்தார். இதை வைத்தே சுமார் 10- ஆண்டுகளுக்கு பின்னர் இவர் கருத்தரித்து க்ளின் காரா என்கிற மகளை பெற்றெடுத்தார்.
ரோமியோ - ஜூலியட் ரேஞ்சுக்கு லவ்; பப்லுவுக்கு அல்வா கொடுத்துட்டு வேறு நபரை திருமணம் செய்த ஷீத்தல்!
Kilin Kaara Photo Reveled
க்ளின் காரா கடந்த ஆண்டு பிறந்த நிலையில், இதுவரை அவரின் குடும்பத்தினர் அவரின் தோற்றம் தெரியும்படி ஒரு புகைப்படத்தை கூட வெளியிடவில்லை. எனவே க்ளின் காராஎப்படி இருப்பார், யாரைப் போல் இருப்பார் என்று தெரிந்து கொள்வதில் மெகா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆவல் என கூறலாம். இந்த நிலையில் தான் உபாசனா சமீபத்தில், தன்னுடைய மகளை கோவிலுக்கு அழைத்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
Ram Charan Daughter Photo
அதில் வெங்கடேஸ்வர சுவாமி உற்சவங்களில் தனது மகளும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது என்று உபாசனா தெரிவித்துள்ளார். அனில், க்ளின் காராவைத் தூக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் க்ளின் காராவின் முகம் தெரிகிறது. க்ளின் காராவின் முகத்தின் தோற்றத்தை ரிலீவ் செய்யும்படி இந்த புகைப்படத்தை உப்பாசனா வெளியிட்டுளளார். இதில் க்ளின் காரா மஞ்சள் நிற பட்டு பாவாடை அணிந்துள்ளார். ஒரு வயதே ஆகும் சிரஞ்சீவி வீட்டு வாரிசான க்ளின் காரா கடந்த ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூலில் சரிவை சந்தித்த விடுதலை 2; வெற்றிமாறன் படத்துக்கே இந்த நிலைமையா?