MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரோமியோ - ஜூலியட் ரேஞ்சுக்கு லவ்; பப்லுவுக்கு அல்வா கொடுத்துட்டு வேறு நபரை திருமணம் செய்த ஷீத்தல்!

ரோமியோ - ஜூலியட் ரேஞ்சுக்கு லவ்; பப்லுவுக்கு அல்வா கொடுத்துட்டு வேறு நபரை திருமணம் செய்த ஷீத்தல்!

பிரபல நடிகர் பப்லு பிரித்திவிராஜ் தன்னுடைய 58 வயதில், 25 வயது பெண்ணான ஷீத்தல் என்பவரை காதலித்து வந்த நிலையில், தற்போது ஷீத்தல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

4 Min read
manimegalai a
Published : Dec 23 2024, 12:34 PM IST| Updated : Dec 23 2024, 12:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Babloo Prithiveeraj Movies

Babloo Prithiveeraj Movies

தமிழில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நடிகர் பிரித்திவிராஜ். இவர் பெங்களூரைச் சேர்ந்தவராக இருந்தாலும், பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். சிறு வயதிலேயே மிகவும் அழகாக இருந்த இவருக்கு 1975 ஆம் ஆண்டு வெளியான, எம்ஜிஆரின் 'நாளை நமதே' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது . முதல் படத்திலேயே பிரபல இயக்குனர் கே எஸ் சேதுமாதவன் இயக்கத்தில், எம்ஜிஆர், லதா, சந்திரமோகன், வெண்ணிற ஆடை நிர்மலா, எம் என் நம்பியார், என ஜாம்பவான்களுடன் நடித்தார். குறிப்பாக பப்லு எம்ஜிஆரின் இளம் வயது தோற்றத்தை இவர் ஏற்று நடித்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க காரணமாக அமைந்தது.

28
Babloo Prithiveeraj Debut Child Artist

Babloo Prithiveeraj Debut Child Artist

இதைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நான் வாழவைப்பேன், ரஜினிகாந்தின் நான் சிகப்பு மனிதன், உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளுக்கும் நடித்தார். இளம் வயதை எட்டிய பின்னர் ஹீரோ வாய்ப்பு தேடியவருக்கு குணச்சித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே தவிர, அழகும் - திறமையும் இருந்தும் ஏனோ இவரால் ஒரு ஹீரோவாக ஜெயிக்க முடியாமல் போனது.

தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் அஜித்: ஹாலிவுட் படம் கூட எடுக்கலாம் – சித்ரா லட்சுமணன்!

38
Babloo Prithiveeraj Get Nandhi Award

Babloo Prithiveeraj Get Nandhi Award

நடிப்பு மட்டுமின்றி, தன்னுடைய பிசினஸிலும் அதிகம் கவனம் செலுத்தி வந்தார் பிரித்திவிராஜ். தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும், இவரை மிகவும் பிரபலமடைய வைத்தது அஜித் - சிம்ரன் நடிப்பில் வெளியான 'அவள் வருவாளா' திரைப்படம் தான்.  ராஜ்கபூர் இயக்கத்தில், 1998 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தெலுங்கில் வெளியான 'பெல்லி' என்கிற திரைப்படத்தின் ரீமைக்காக எடுக்கப்பட்டது. இப்படத்தில் சிம்ரனின் கணவர் கதாபாத்திரத்தில் தான் பப்லு நடித்திருந்தார். தெலுங்கிலும் ஹீரோயின் கணவராக இவரே நடித்திருந்த நிலையில், 'பெல்லி' படத்திற்கு சிறந்த வில்லன் நடிகருக்கான நந்தி விருது இவருக்கு கிடைத்தது. 
 

48
Animal Movie

Animal Movie

இதைத்தொடர்ந்து தெலுங்கில் பிஸி நடிகராக மாறிய பப்லு, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தார். இவர் கடைசியாக கடந்த ஆண்டு இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில், ரன்வீர் கபூர் நடிப்பில் வெளியான 'அனிமல்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்திற்காக இவரது கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. தற்போது இவரின் கைவசம் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'ஏஸ்' திரைப்படம் உள்ளது. இந்த படத்திலும் பப்லு பிரித்திவிராஜ் வில்லன் ரோலில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

10 லட்சம் செலவு செய்து படித்த சாப்ட்வேர் வேலை: உதறிவிட்டு சினிமாவுக்கு வந்த நடிகரின் மகன்கள்!
 

58
Prithiveeraj Acting More Serials

Prithiveeraj Acting More Serials

வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பிரபலமான பப்லு, ஏராளமான சீரியல்களிலும் - ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக இவர் நடித்த மர்ம தேசம், பிரேமி, ராஜராஜேஸ்வரி, அரசி, அலைபாயுதே, கோகுலத்தில் சீதை, வாணி ராணி, கண்ணான கண்ணே, அன்பே வா, போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். கூடிய விரைவில் இவர் புது சீரியல் ஒன்றிலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எந்த ஒரு விஷயத்தையும், நேரடியாக மற்றும் வெளிப்படையாக பேசும் மனிதர் பப்லு. இதன் காரணமாகவே இவர் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் நடிகர் சிம்புவை விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல் நடிகை ராதிகாவுடன் 'வாணி ராணி' சீரியலில் நடித்த போது, ராதிகா எப்போதுமே தனக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நினைப்பார் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

68
Babloo Prithiveeraj First wife and son

Babloo Prithiveeraj First wife and son

பப்லு பிரித்திவிராஜ்  கடந்த 1994-ஆம் ஆண்டு பீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு Ahed என்கிற மகன் ஒருவர் உள்ளார். 25 வயதுக்கு மேல் ஆகும் இவருர் ஆட்டிசம் குறைபாடு கொண்டவர். தன்னுடைய மகனை பார்த்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே பப்லு பிரித்திவிராஜ் மற்றும் பீனா இருவரும் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. தன்னுடைய மகன் மீது பப்லு பிரித்திவிராஜ் உயிரையே வைத்திருந்தாலும், சில கருத்து முரண்பாடு காரணமாக மனைவியை கடந்த 2022-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

இதன் பின்னர் மலேசியாவைச் சேர்ந்த ஷீத்தல் என்பவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அதை மறுத்த பிரித்திவிராஜ் கூடிய விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை எங்களின் திருமணம் நடக்கவில்லை என்பதையும் கூறி இருந்தார்.  

ஜெயம் ரவியின் விவாகரத்து வழக்கு! ஆர்த்தியுடன் சமரசம்? மத்தியஸ்தர் கூறிய தகவல் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

78
Babloo Prithiveeraj Love 25 young Girl Sheetal

Babloo Prithiveeraj Love 25 young Girl Sheetal

58 வயதில் 25 வயது பெண்ணை பிரித்திவிராஜ் காதலித்தது, கடந்த ஆண்டு சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்ட விஷயமாக மாறியது. ஒரு சிலர் இதனை விமர்சித்தாலும் இன்னும் சிலர், "பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான் உனக்கு என்ன? என்று " மீம்ஸ் போட்டு கலாய்த்து வந்தனர். தன்னுடைய காதலியின் பிறந்த நாளுக்கு பல லட்ச ரூபாய் செலவு செய்து அவருக்கு சூட் ரூம் புக் செய்து, இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரித்திவிராஜ் ஏகப்பட்ட பரிசு பொருட்களையும் வாங்கிக் கொடுத்து கோடிக்கணக்கில் செலவு செய்தார் என கூறப்பட்டது. ஷீத்தலும் - பப்லு பிரித்திவிராஜூம் உருகி உருகி ரோமியோ ஜூலியட் ரேஞ்சுக்கு காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது. இதனை பப்லு உறுதி செய்யவில்லை என்றாலும் ஷீத்தல், பப்லு உடனான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் நீக்கி உறுதி செய்தார்.

88
Sheetal weds Long Days Friend

Sheetal weds Long Days Friend

பிரித்திவிராஜிடம் இருந்து பிரிந்த கையேடு, ஷீத்தல் தன்னுடைய நண்பரையே திருமணம் செய்து கொண்டுள்ளதாக புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். கணவரின் முகத்தை காட்டவில்லை என்றாலும் மணமகள் கெட்டப்பில், தற்போது புகைப்படம் வெளியிட்டுள்ளார். ஷீத்தல் திருமணம் செய்து கொண்டுள்ள நண்பர் ஒரு தடகல விளையாட்டு வீரர் என கூறப்படுகிறது. மேலும் ஜிம்மில் பயிற்சியாளராக உள்ளாராம். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்களின் உடல் அமைப்பு ரவிவாஸ் கிளாசிக்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வா முதல் ராமராஜன் வரை! டிசம்பர் 20 ஓடிடி-யை ஆக்கிரமித்த நடிகர்களின் படங்கள்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved