MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அதர்வா முதல் ராமராஜன் வரை! டிசம்பர் 20 ஓடிடி-யை ஆக்கிரமித்த நடிகர்களின் படங்கள்!

அதர்வா முதல் ராமராஜன் வரை! டிசம்பர் 20 ஓடிடி-யை ஆக்கிரமித்த நடிகர்களின் படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில், விடுதலை முதல் மொத்தம் 5 படங்கள் ரிலீசாகி உள்ள நிலையில், ஓடிடியில் வெளியாகியுள்ள தென்னிந்திய மொழி படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.  

2 Min read
Author : manimegalai a
Published : Dec 21 2024, 01:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Nirangal Moondru

Nirangal Moondru

நிறங்கள் மூன்று:

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நவம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இந்த வாரம் டிசம்பர் 20-ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்தை ஐயங்காரன் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம், கருணாமூர்த்தி தயாரித்துள்ளார். அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில், நடிகர் சரத்குமார் மற்றும் ரகுமான், அம்மு அபிராமி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் திரையரங்கில் பெற்ற வரவேற்பை விட ஓடிடி நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

'நிறங்கள் மூன்று' படத்திற்கு டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீஜித் சாரங்கன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Samaniyan

Samaniyan

சாமானியன்:

நடிகர் ராமராஜன் பல வருடங்களுக்கு பின்னர் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் 'சாமானியன்'. இந்த படத்தை இயக்குனர் ராகேஷ் இயக்க , மதியழகன் என்பவர் தயாரித்திருந்தார். இந்த படத்தில் ராமராஜரை தவிர எம்.எஸ். பாஸ்கர், கே எஸ் ரவிக்குமார், போஸ் வெங்கட், மைம் கோபி, சரவண சுப்பையா, வினோதினி வைத்தியநாதன், தீபா ஷங்கர், ஸ்மிருதி வெங்கட், அபர்னதி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மே 23ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், சுமார் 7 மாதங்கள் கழித்து டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க, அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராம் கோபி படத்தொகுப்பு பணிகளை கவனித்தார். திரையரங்கில் தவற விட்ட ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து ரசிக்க இது அறிய வாய்ப்பாக மாறியுள்ளது.

எதிர்பாராத போட்டியாளரை வெளியேற்றி ட்விஸ்ட் கொடுத்த பிக்பாஸ்! கண்ணீரோடு வெளியே சென்றது யார் தெரியுமா?

35
Zebra Movie

Zebra Movie

ஜீப்ரா:

நவம்பர் 22ஆம் தேதி, தெலுங்கில் வெளியான திரைப்படம் 'ஜீப்ரா'. ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், சத்யதேவ் ஹீரோவாக நடிக்க, பிரியா பவானி சங்கர் இந்த படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் தனஜெயா, சத்யராஜ், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம், ஒரே மாதத்தில் ஓடிடிக்கு பேக்கப் ஆகியுள்ளது. அதன்படி டிசம்பர் ஆஹா ஓடிடி தளத்தில், டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு அனில் க்ரிஷ் என்பவர் படத்தொகுப்பு செய்ய, சத்யா பொன்மார் ஒளிப்பதிவு செய்துள்ளார் ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார்.

45
Mura Movie

Mura Movie

முரா:

மலையாள திரைப்படமான 'முரா' நவம்பர் 8ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன நிலையில், இந்த வாரம் பிரைம் ஓடிடி தளத்தில் டிசம்பர் 20 அன்று வெளியாகி உள்ளது. முகமத் முஸ்தபா இயக்கியிருந்த இந்த படத்தில், சுராஜ் வெஞ்சரமூடு முன்னிலை கதாபாத்திரத்தில் நடிக்க, ஹிந்து ஹரூன், மாலா பார்வதி, பி எல் தேனப்பன், உள்ளிட்டா பலர் நடித்துள்ளனர். ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இந்த படத்தை ரியா சிபு தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

'லால் சலாம்' ஓப்பனிங் வசூலை சல்லி சல்லியாய் நொறுக்கிய 'விடுதலை 2'! முதல் பாகத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

55
Hollywood Movies

Hollywood Movies

இதை தவிர இந்த வாரம், ஹாலிவுட் படங்களான ட்விஸ்ட்டர்ஸ், டியர் சாண்டா, தி பிரிட்ஜ், சிக்ஸ் ட்ரிபிள் எய்ட், போன்ற பல ஹாலிவுட் பல ஹாலிவுட் படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆனால் தென்னிந்திய மொழி படங்கள் ஓடிடியில் மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved