MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'லால் சலாம்' ஓப்பனிங் வசூலை சல்லி சல்லியாய் நொறுக்கிய 'விடுதலை 2'! முதல் பாகத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

'லால் சலாம்' ஓப்பனிங் வசூலை சல்லி சல்லியாய் நொறுக்கிய 'விடுதலை 2'! முதல் பாகத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

'விடுதலை 2' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டாரின் 'லால் சலாம்' பட வசூலை விட இரண்டு மடங்கு வசூலை குவித்துள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 21 2024, 09:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Vetrimaran Movie Viduthalai 2

Vetrimaran Movie Viduthalai 2

வாழ்வியலை தன்னுடைய திரைப்படங்கள் மூலம் அழகாக வெளிப்படுத்தும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நேற்று வெளியான விடுதலை 2  திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Soori Acting Viduthalai 2 Movie Box Office

Soori Acting Viduthalai 2 Movie Box Office

இயக்குனர் வெற்றிமாறன், விடுதலை படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து, இயக்கி உள்ள திரைப்படம் தான் 'விடுதலை 2'.  இந்தப் படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், விஜய் சேதுபதி முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சூரிய ஜோடியாக நடிகை பவானி ஸ்ரீ நடிக்க, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இவர்களை தவிர இயக்குனர் பாலாஜி சக்திவேல், சேத்தன், ராஜு மேனன், அனுராக் காஷ்யப், கௌதம் மேனன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ஹீரோயின்களையே அழகில் ஓவர் டேக் செய்யும் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் மனைவி மோனிஷா; போட்டோஸ்!
 

36
Vetrimaran Direct Viduthalai 2

Vetrimaran Direct Viduthalai 2

ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் முதல் பாகம், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் மூலம் காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறிய நடிகர் சூரிக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை இப்படம் ஏற்படுத்தி தந்தது. முதல் பாகத்தை எந்த இடத்தில் வெற்றிமாறன் முடித்தாரோ, அதே இடத்தில் இருந்து இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது. எனவே இந்த படத்தின் முடிவு என்னவாக இருக்கும்? என்பதை தெரிந்து கொள்வதில் பல ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கமும் இதுக்கு முக்கிய காரணம்.

46
Vijay Sethupathi Score the Performance

Vijay Sethupathi Score the Performance

அந்த வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான விடுதலை இரண்டாம் பாகம் திரைப்படத்தில், விஜய் சேதுபதி எப்படி வாத்தியாராக மாறுகிறார்? அவர் வாழ்க்கையில் நடந்தது என்ன? என்பதை விவரிக்கும் விதத்தில் இருந்தது. சூரி தன்னுடைய அம்மாவுக்கு கடிதம் மூலம் ஒரு கதையை சொல்வது போலவும், அதே கதையை விஜய் சேதுபதி ஒரு போலீசிடம் சொல்வது போன்றும் காட்சி அமைக்கப்பட்டது வெற்றிமாறனின் ஸ்க்ரீன் பிளே மேஜிக்கை உணர வைத்தது.

அட்ரா சக்க; 'விடாமுயற்சி' படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்! அஜித்துடன் வெளியிட்ட வேற லெவெல் போட்டோ!
 

56
Viduthalai 2 Movie Day 1 Box office Collection

Viduthalai 2 Movie Day 1 Box office Collection

அதேபோல் விஜய் சேதுபதி ஒரு போராளியாக மாற காரணம் என்ன? தமிழர் மக்கள் படை ஏன் உருவாகிறது? மஞ்சு வாரியருக்கு என்ன ஆனது? இந்த படத்தின் மூலம் கம்யூனிசத்தையும் பேசி இருந்தார் வெற்றிமாறன். முதல் பாகம் கொஞ்சம் நொண்டியடித்தாலும், இரண்டாம் பகுதி வேகமாக நகர்கிறது. குறிப்பாக இளையராஜாவின் இசை கதையை மெருகேற்றி இருந்தது.
 

66
Viduthalai Beat Lal Salaam Collection

Viduthalai Beat Lal Salaam Collection

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற சூரி நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் படத்தின் ஓப்பனிங் வசூலை சல்லி சல்லியாய் நொறுக்கியுள்ளது. லால் சலாமை விட இரண்டு மடங்கு வசூலை அள்ளி உள்ளது. அதன்படி விடுதலை 2 திரைப்படம், முதல் நாளே தமிழகத்தில் மட்டும் ரூ.8 கோடியும்...  உலக அளவில் மொத்தம் 9 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. லால் சலாம் திரைப்படம் முதல் நாளில் ரூ.3 .55 கோடி மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

'விடுதலை 2' திரைப்படம், தலைவரின் லால் சலாம் வசூலை மிஞ்சி உள்ள, விடுதலை முதல் பாகம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா. முதல் நாளில் 3.5 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தாலும், உலக அளவில் 4 நாட்களில் மட்டும் 28 கோடியை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
 

13 வயதிலேயே நடிப்பில் அம்மா ஐஸ்வர்யாவுக்கே டஃப் கொடுக்கும் மகள்! பள்ளி நாடகத்தில் அசத்திய ஆராத்யா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சூரி (நடிகர்)
விஜய் சேதுபதி
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved