ஒரு பாடலுக்கு இத்தனை கோடியா? ராம் சரணின் RC 15 படத்திற்காக நியூசிலாந்து சென்று ஷங்கர் செய்த சிறப்பான சம்பவம்!
ராம் சரண் நடிக்கும் 'RC 15' படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு மட்டும் மிக பெரிய தொகையை செலவழித்து, நியூசிலாந்தில் அந்த பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.
தமிழ் சினிமாவாவின் முன்னணி ஹீரோக்களை வைத்தே தொடர்ந்து படம் இயக்கி வரும், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தற்போது முதல் முறையாக, RRR பட நாயகன், ராம் சரணை வைத்து இன்னும் பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார். 'இந்தியன் 2' மற்றும் ராம் சரணின் 'RC 15' என இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வரும் ஷங்கர் தற்போது, ராம் சரணின் ஒரே ஒரு பாடலை படமாக்க, ரூபாய் 15 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிக பிரமாண்டமான முறையில்... நியூசிலாந்தில் படமாக்கப்பட்டுள்ள இந்த பாடல் இன்று எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், படக்குழுவினர் ஒன்றாக எடுத்து கொண்ட சில புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. இதில் பாடல் எடுத்து முடிக்கப்பட்ட சந்தோஷத்தை கேக் வெட்டி ராம் சரண், கியாரா அத்வானி, இயக்குனர் ஷங்கர் ஆகியோர் கொண்டாடியுள்ளனர்.
நியூசிலாந்தின் உள்ள இயற்க்கை அழகை இதுவரை யாரும் காட்சிப்படுத்தாத வண்ணம் இந்த பாடலை மூலம் இயக்குனர் ஷங்கர் மிக பிரமாண்ட முறையில் படமாகியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் திரைப்படங்களில், பட்ஜெட்டை தெறிக்கவிடும் இயக்குனர் என பெயரெடுத்த ஷங்கர்... இந்த ஒரே பாடலுக்கு இப்படி 15 கோடியை செலவழித்துள்ளது எடுத்துள்ளார் என்றால் எந்த அளவிற்க்கு இந்த பாடல் இருக்கும் என்பதை நீங்களே யூகித்து பாருங்கள். மேலும் இந்த தகவல் திரையுலகினரை ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து சிறப்பான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும், ராம் சரணின் இந்த படத்தை, பிரபல தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்துள்ளார். ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், ஜெயராம், ஸ்ரீகாந்த், அஞ்சலி மற்றும் சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.