10 கிலோ உடல் எடை குறைக்க புதிய ஐடியா – டயட்டை ஸ்டார்ட் பண்ணிய ராம் சரண்!
Ram Charam 10 Kg Weight Loss For His New Movie in Tamil : ராம் சரண் தனது அடுத்த படத்திற்காக 10 கிலோ வரையில் எடை குறைத்து மீண்டும் 10 கிலோ எடையை கூட்ட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

10 கிலோ உடல் எடை குறைக்க புதிய ஐடியா – டயட்டை ஸ்டார்ட் பண்ணிய ராம் சரண்!
Ram Charam 10 Kg Weight Loss For His New Movie in Tamil : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ராம் சரண் கடைசியாக கேம் சேஞ்சர் படத்தில் நடித்திருந்தார். பிரம்மாண்ட இயக்குநர் என்று சொல்லப்படும் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தப் படம் முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்தி வெளியாகியிருந்தது. இந்தப் படத்தில் ராம் சரண் மாவட்ட ஆட்சியராகவும், அதன் பிறகு தலைமை தேர்தல் அதிகாரியாகவும் நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா, சுனில், ஜெயராம், ஸ்ரீகாந்த் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ரூ.425 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.178 கோடி வரையில் தான் வசூல் குவித்திருந்தது. படத்தின் பட்ஜெட்டை விட குறைவான வசூல் குவித்த நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜூவிற்கு இந்தப் படம் நஷ்டத்தை கொடுத்துள்ளது.
10 கிலோ உடல் எடை குறைக்க புதிய ஐடியா – டயட்டை ஸ்டார்ட் பண்ணிய ராம் சரண்!
இதன் காரணமாக தில் ராஜூ அதிரடியாக ஒரு முடிவை எடுத்தார். அதாவது, இனிமேல் அதிக பட்ஜெட் படங்களை தயாரிப்பதற்கு பதிலாக குறைவான பட்ஜெட் கொண்ட படங்களை தயாரித்து அதன் மூலமாக அதிக லாபம் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். இந்தநிலையில் தான் இந்த படத்திற்கு பிறகு ராம் சரண் அடுத்தடுத்து 4 படஞ்களில் நடித்து வருகிறார். அதன்படி ஆர்சி16 (RC16), RC17, RC18, RC19 ஆகிய படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.
10 கிலோ உடல் எடை குறைக்க புதிய ஐடியா – டயட்டை ஸ்டார்ட் பண்ணிய ராம் சரண்!
ஏற்கனவே கேம் சேஞ்சர் தோல்வி கொடுத்த நிலையில் இனி நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையையும் கவனமாக தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த நிலையில் ஒவ்வொரு படத்தையும் இப்போது கவனமாக நடிக்க முடிவு செய்திருக்கிறார். கேம் சேஞ்சர் பட தோல்விக்கு பிறகு ராம் சரண் தன்னுடைய 16ஆவது படத்திற்கு உப்பெனா புகழ் இயக்குநர் புச்சி பாபு சனா உடன் இணைந்துள்ளார். முழுக்க முழுக்க ரொமாண்டிக் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ், விருத்தி சினிமாஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பேனர்கள் தயாரித்து வருகின்றன. கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய ரோலில் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
10 கிலோ உடல் எடை குறைக்க புதிய ஐடியா – டயட்டை ஸ்டார்ட் பண்ணிய ராம் சரண்!
இப்போது நடித்து வரும் புதிய படத்திற்காக அவர் 10 கிலோ வரையில் உடல் எடை குறைக்க இருக்கிறார். புதிய படத்தின் கதை, காட்சிகள் மிகவும் சிறப்பாக உருவாக்கப்படுகின்றன. ஃப்ளாஷ்பேக் காட்சியும் இப்படத்தில் இடம்பெறும். இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் ராம் சரண், ஃப்ளாஷ்பேக் காட்சிக்காக 10 கிலோ எடை குறைக்கிறார். ஏற்கனவே டயட்டையும் தொடங்கிவிட்டார்.
10 கிலோ உடல் எடை குறைக்க புதிய ஐடியா – டயட்டை ஸ்டார்ட் பண்ணிய ராம் சரண்!
படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஃப்ளாஷ்பேக் காட்சிக்காக எடை குறைக்க உள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும், குறைந்த எடையை மீண்டும் பெற திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் ராம் சரண், இந்த முறை வெற்றி பெறுவாரா? இப்படத்திற்காக அவர் கடுமையாக உழைக்கிறார். இப்படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க, ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்த முறை ராம் சரணுக்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
1600 மணி நேரம் செய்யப்பட்ட நெக்லஸ் – பிரியங்கா சோப்ராவின் கழுத்தில் மின்னிய நெக்லஸின் விலை எவ்வளவு?