rakul preet singh : சிவப்பு வண்ண உடையில் மனதை மயக்கும்..ரகுல் ப்ரீத் சிங்..நியூ லுக்
தற்போது சிவப்பு வண்ண உடையில் இவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை வசிகரித்து வருகிறது.
கன்னடத் திரையுலகில் அடியெடுத்து வைத்த ரகுல் ப்ரீத் சிங். தற்போது தெலுங்கு, தமிழ், பாலிவுட் என பிஸியாக இருக்கிறார்.
இவர் தமிழில் தடையரா தாக்க படம் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து புத்தகம், என்னமோ ஏதோ, கரடு முரடான, புரூஸ் லீ உள்ளிட்ட பல படங்களில் தோன்றியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...Happy Birthday Keerthy Suresh : மனைவியுடன் கீர்த்தியின் பிறந்தநாள் புகைப்படத்தை பகிர்ந்த அட்லீ
தெலுங்கு பக்கம் சென்ற இவருக்கு அங்கு அமோக வரவேற்பு கிடைத்தது. வருடத்திற்கு மூன்றில் இருந்து நான்கு படங்களில் நடித்து வந்தார்.
பின்னர் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்த இவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. பின்னர் என் ஜி கே படத்தில் நடித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...Happy Birthday Keerthy Suresh : குழந்தை நட்சத்திரம் டு தேசிய விருது நாயகி...கீர்த்தி குறித்த சில தகவல்
நல்ல படங்களில் நடித்த போதிலும் தமிழில் இவருக்கு வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அயலான், இந்தியன் 2, பெண்கள் இரவு ஆகிய மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
32 வயதை வயதாகும் ரகுல் பிரீத் சிங் மற்றும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே இவர் தனது அழகான கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு வண்ண உடையில் இவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை வசிகரித்து வருகிறது.