மாலத்தீவில் பிகினி போட்டோஷூட் நடத்திய ரகுல் ப்ரீத் சிங்... அயலான் நாயகியின் டூமச் கிளாமர் போட்டோஸ் இதோ
மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங், அங்கு பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நடிகைகளின் சொர்க்க பூமியாக விளங்கி வருகிறது மாலத்தீவு. கடந்த சில ஆண்டுகளில் மாலத்தீவு சுற்றுலா மேம்பாட்டுக்கு முக்கிய பங்காற்றியது இந்திய திரைப்பிரபலங்கள் தான். அங்கு செல்லாத நடிகர், நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு மாலத்தீவுக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் ஏராளமானோர் மாலத்தீவுக்கு அடிக்கடி விசிட் அடித்த வண்ணம் உள்ளன.
நடிகர்களை விட நடிகைகளே மாலத்தீவுக்கு அதிகளவில் சென்றுள்ளனர். இப்படி திரைப்பிரபலங்கள் அங்கு அடிக்கடி விசிட் அடிப்பதற்கு முக்கிய காரணம், மாலத்தீவில் அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் தான். திரைப்பிரபலமோ, யூடியூப் பிரபலமோ யாராக இருந்தாலும் சரி, உங்களுக்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் பாலோவர்கள் இருந்தால், நீங்களும் மாலத்தீவுக்கு கம்மியான பட்ஜெட்டில் சென்று வரலாம்.
இதையும் படியுங்கள்... ஐபிஎல் முடிந்த கையோடு குக் வித் கோமாளி ஷோவில் எண்ட்ரி கொடுத்த கிரிக்கெட் வீரர்கள் - செம்ம டுவிஸ்ட் வெயிட்டிங்
நடிகை மாலத்தீவுக்கு சென்றால், தவறாமல் செய்யும் விஷயம் என்றால் அது போட்டோஷூட் தான். அதிலும் குறிப்பாக மாலத்தீவில் காலடி எடுத்து வைத்தாலே பிகினி உடையில் போட்டோஷூட் நடத்திவிடுவார்கள் என சொல்லும் அளவுக்கு ஏராளமான முன்னணி நடிகைகள் அங்கு சென்று டூபீஸில் டூமச் கிளாமர் காட்டி போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
அந்த வகையில் தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங், தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளதோடு, அங்குள்ள கடற்கரையில் மஞ்சள் நிற பிகினி உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி உள்ளார். அவரின் பிகினி புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் தமிழில் ஷங்கரின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் போன்ற 2 பிரம்மாண்ட திரைப்படங்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ரோபோ ஷங்கர் மகளுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? வெக்க புன்னகையோடு வெளியிட்ட புகைப்படம்!