‘டைகர்’ முத்துவேல் பாண்டியனாக மாஸ் காட்டினாரா ரஜினி?- முதல் ஆளாக ஜெயிலர் படம் பார்த்து விமர்சனம் சொன்ன அனிருத்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தினை முதல் ஆளாக பார்த்த அனிருத், தன்னுடைய விமர்சனத்தை கூறி உள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. அந்நிறுவனம் இதற்கு முன்னர் ரஜினி நடித்த எந்திரன், பேட்ட, அண்ணாத்த போன்ற படங்களை தயாரித்து உள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, மிர்ணா, தமன்னா, ஷிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், விநாயகன், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
jailer
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டைய கிளப்பி வருகின்றன. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால், அதன் புரமோஷன் பணிகளும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் ஜெயிலர் படத்திற்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... கருணை காட்டாத ரஜினி... தனி ஒருவனாக ஜெயிலர் இயக்குனர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
jailer
தமிழகத்திலும் விரைவில் ஜெயிலர் படத்திற்கான முன்பதிவு தொடங்க உள்ளது. ஜெயிலர் படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் என்கிற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். சிலைக்கடத்தலை மையமாக வைத்து ஜெயிலர் திரைப்படத்தை எடுத்துள்ளாராம் நெல்சன். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் இசைக்கோர்பு பணிகளை நிறைவு செய்துள்ள அனிருத், முதல் ஆளாக ஜெயிலர் படத்தை பார்த்து தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அதன்படி ஜெயிலர் திரைப்படம் தீயாக இருப்பதாகவும், நிச்சயம் கப் அடிக்கும் என்பதை குறிக்கும் வகையில் எமோஜிகளின் வாயிலாக தன்னுடைய முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ தலைவருக்கு தரமான கம்பேக் படமாக ஜெயிலர் இருக்க வாய்ப்புள்ளதாக கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஞானவேல் இயக்கத்தில் "தலைவர் 170".. படத்தில் இணையும் அடுத்த பிரபலம் - ஆனா கேமியோ ரோல் தானாம்!