ஞானவேல் இயக்கத்தில் "தலைவர் 170".. படத்தில் இணையும் அடுத்த பிரபலம் - ஆனா கேமியோ ரோல் தானாம்!
தமிழ் திரை உலகில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான "ரத்த சரித்திரம்" என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு எழுத்தாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்தான் டி.ஜே ஞானவேல். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது திரைப்படத்தை இயக்க உள்ளார்.
இயக்குனர் ஞானவேல், "கூட்டத்தில் ஒருத்தன்" திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கினார். 2017ம் ஆண்டு அந்த திரைப்படம் வெளியான நிலையில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து பிரபல நடிகர்கள் சூர்யா மற்றும் மணிகண்டன் நடிப்பில் வெளியாகி மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய "ஜெய் பீம்" என்ற திரைப்படத்தை கொடுத்ததன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார் ஞானவேல் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது ஞானவேல் அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க உள்ள 170வது திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கான பணிகள் தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
திருமணமான ஒரே வருடத்தில்... பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையின் கணவர் அதிர்ச்சி மரணம்!
ஏற்கனவே வெளியான அதிகாரப்பூர்வ தகவலின்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இந்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அமிதாபச்சன் நடிக்க இருக்கிறார். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அமிதாப் பச்சையுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிக்க உள்ளது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் இந்த 170வது திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகர் நானி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே தோன்றும் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நானி இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஜெயிலர் பட வேலைகளை முடித்துவிட்டு மாலத்தீவுகளுக்கு சென்று திரும்பி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தற்போது ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவையும் முடித்துள்ள நிலையில் அடுத்தபடியாக இமயமலைக்கு சில நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார். இமயமலை சென்று திரும்பியதும் தலைவர் 170 திரைப்படத்தின் படபிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.