MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருணை காட்டாத ரஜினி... தனி ஒருவனாக ஜெயிலர் இயக்குனர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

கருணை காட்டாத ரஜினி... தனி ஒருவனாக ஜெயிலர் இயக்குனர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு கேரளாவில் அதிகளவிலான தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மலையாள ஜெயிலர் பட இயக்குனர் தர்ணா போராட்டம் நடத்தி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Aug 04 2023, 11:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஒரே நாளில் ஒரே பெயர் கொண்ட இரண்டு திரைப்படங்கள் இதுவரை எந்த திரையுலகிலும் வெளியானதில்லை. அப்படி ஒரு நிகழ்வு தான் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி நடக்க உள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படமும், அதே பெயரில் சக்கீர் மடதில் இயக்கியிருக்கும் மலையாள திரைப்படம் ஒன்றும் ஆக்ஸ்ட் 10-ந் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளன. இதுதான் தற்போது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

24

சக்கீர் மடதில் இயக்கியுள்ள ஜெயிலர் திரைப்படம் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தோடு ரஜினி நடித்த ஜெயிலர் படமும் அதே தலைப்பில் ரிலீஸ் ஆனால் தன்னுடைய படத்தின் வசூல் பாதிக்கும் எனக்கூறி, தமிழ் ஜெயிலர் படக்குழுவிடம் கேரளாவில் மட்டும் பெயரை மாற்றி ரிலீஸ் செய்யுமாறு மலையாள ஜெயிலர் படக்குழு கோரிக்கை வைத்தது. ஆனால் அவர்களின் கோரிக்கையை தமிழ் ஜெயிலர் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்க மறுத்துவிட்டது.

இதையும் படியுங்கள்.... 30 வயதில் மாரடைப்பு... மரணத்தை அன்றே கணித்தாரா சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர்?

34
sakkir madathil

sakkir madathil

இதையடுத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த மலையாள ஜெயிலர் பட இயக்குனர் சக்கீர் மடதில், தான் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளின் நகையை விற்றும், வீட்டை அடமானம் வைத்தும் கடன் வாங்கி தான் இந்த படத்தை எடுத்துள்ளதாகவும், இப்படத்தின் வெற்றியை நம்பி தான் என் எதிர்காலமே உள்ளது. ரஜினி நல்ல மனம் கொண்டவர். அவர் இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

44
sakkir madathil

sakkir madathil

ஆனால் ரஜினி அதை கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில், கேரளாவில் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ள இரு ஜெயிலர் படங்களுக்கு தியேட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி தமிழ் ஜெயிலர் படத்திற்கு 400 தியேட்டர்களும், மலையாள ஜெயிலர் படத்திற்கு 40 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம். இதனால் கடுப்பான மலையாள ஜெயிலர் பட இயக்குனர் சக்கீர் மடதில், கேரள பிலிம் சேம்பர் அலுவலகம் முன், “மலையாள சினிமாவை காப்பாற்றுங்கள்” என்கிற பதாகைகளுடன் தர்ணா போராட்டம் நடத்தி உள்ளார். இதனால் பரபரப்பு நிலவியது. தமிழ் ஜெயிலர் படத்தில் மோகன்லால் கேமியோ ரோலில் நடித்துள்ளதால் தான் இப்படத்திற்கு கேரளாவிலும் அதிகளவு மவுசு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்.... தமன்னா எங்கடா?.... ஜெயிலர் ஷோகேஸ் டிரைலரில் நெல்சன் கட் பண்ணிய கேரக்டர்கள் இத்தனையா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கேரளா

Latest Videos
Recommended Stories
Recommended image1
நடிகை அஞ்சுவின் கண்ணீர் பக்கங்கள்! 'கேளடி கண்மணி' நட்சத்திரத்தின் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கை ரகசியம்!
Recommended image2
சிவப்பு மைசூர் சில்க் புடவை.. ஜொலிக்கும் தங்க மயில் நெக்லஸ்! ரிசப்ஷனில் தேவதையாய் மின்னிய ராஷ்மிகா!
Recommended image3
விக்ரம் - விஜி ஜோடியும், லாவண்யாவின் வில்லத்தனமும் – விறுவிறுப்பான திரைக்கதைகளுடன் செல்லமே செல்லமே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved