MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • MGR : ஜெயலலிதா தான் வில்லி... எம்ஜிஆரின் பிடிவாதத்தால் பிளாப் ஆன படம்... பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த ரகசியம்!

MGR : ஜெயலலிதா தான் வில்லி... எம்ஜிஆரின் பிடிவாதத்தால் பிளாப் ஆன படம்... பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த ரகசியம்!

Jayalalitha Villi For MGR : எம்ஜிஆருக்கு ஜோடியாக ஏராளமான படங்களில் நடித்த ஜெயலலிதா, அவருக்கு வில்லியாக நடித்த படம் அட்டர் பிளாப் ஆனது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 08 2026, 11:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jayalalitha Villi For MGR
Image Credit : Asianet News

Jayalalitha Villi For MGR

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யா மூவீஸ், நடிகரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. ஆனால் அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான 'கண்ணன் என் காதலன்' திரைப்படம் மட்டும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த தோல்விக்கான காரணத்தை தயாரிப்பாளரும், எம்ஜிஆரின் நெருங்கிய நம்பிக்கையாளர்ுமான ஆர்எம்.வீரப்பன், பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆர்எம்.வீரப்பன் சொன்ன சீக்ரெட்
Image Credit : Ravikumar Facebook

ஆர்எம்.வீரப்பன் சொன்ன சீக்ரெட்

ஆர்எம்.வீரப்பன், எம்ஜிஆரின் நாடக மன்றம் மற்றும் திரைப்பட நிறுவனத்தின் நிர்வாகியாக மட்டுமல்லாமல், பின்னர் அவரது அமைச்சரவையிலும் முக்கிய பொறுப்பில் இருந்தவர். சத்யா மூவீஸ் சார்பில் எம்ஜிஆரை வைத்து ஆறு திரைப்படங்களை தயாரித்த அவர், அதில் நான்காவது படமாக வெளியான 'கண்ணன் என் காதலன்' எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

அந்தப் படத்தின் கதையில் இரண்டு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருந்ததாக அவர் கூறியுள்ளார். அதில், ஒரு பெண்ணை கதாநாயகன் காதலிப்பார். மற்றொரு பெண், கதாநாயகனை அடைய வேண்டும் என்பதற்காக உடல்நலக் குறைவு ஏற்பட்டது போல நடித்து, அவரது இரக்கத்தையும் அன்பையும் பெற்று திருமணம் செய்து கொள்வார் என்ற திருப்பத்துடன் கதை அமைந்திருந்ததாம்.

Related Articles

Related image1
எம்ஜிஆர் விட்ட சாபம் அப்படியே நடக்குது.! நடிகர் சிவக்குமார் வெளியிட்ட சுவாரஸ்யம்.!
Related image2
Now Playing
வீரத்தை ஊட்டி வளர்த்த எம்ஜிஆர்... மறக்கப்பட்ட போர்க்கலைகளின் மீட்பர்..
34
ஜெயலலிதாவின் விருப்பம்
Image Credit : Asianet News

ஜெயலலிதாவின் விருப்பம்

இந்த கதாபாத்திரத்தில் ஜெயலலிதா நடித்தால் ரசிகர்களால் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படாது என்று ஆர்எம்.வீரப்பன் கருதியதாகவும், அதனால் அந்த வேடத்தை அப்போது வளர்ந்து வந்த நடிகை வாணிஸ்ரீக்கு வழங்க திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு, எம்ஜிஆர் காதலிக்கும் கதாநாயகி வேடத்தை அளிக்க முடிவு செய்திருந்தாராம்.

ஆனால், கதை குறித்து அறிந்த ஜெயலலிதா, வாணிஸ்ரீக்கு ஒதுக்கப்பட்டிருந்த சவாலான கதாபாத்திரத்தில் தான் நடிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை எம்ஜிஆரிடமும் அவர் நேரடியாக தெரிவித்ததாகவும், அதன்பிறகு ஜெயலலிதாவின் விருப்பத்திற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் தெரிவித்ததாகவும் ஆர்எம்.வீரப்பன் நினைவுகூர்ந்துள்ளார்.

44
மாற்ற மறுத்த எம்ஜிஆர்
Image Credit : Twitter

மாற்ற மறுத்த எம்ஜிஆர்

ஜெயலலிதா ஏற்கனவே எம்ஜிஆருடன் பல வெற்றிப் படங்களில் ஜோடியாக நடித்திருந்ததால், ரசிகர்களின் மனதில் உருவாகியிருந்த அவர்களின் திரைமுகப் பிம்பம் காரணமாக இந்தக் கதாபாத்திரம் பொருந்தாது என்று பலமுறை எச்சரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இருந்தாலும், ஜெயலலிதாவின் விருப்பத்தையே எம்ஜிஆர் இறுதியாக ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அந்த முடிவை அப்போது தான் உறுதியாக எதிர்த்திருக்க வேண்டும் என்றும், அப்படி செய்திருந்தால் 'கண்ணன் என் காதலன்' வெற்றிப் படமாக மாறியிருக்கும் என்றும் ஆர்எம்.வீரப்பன் தனது பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார். படத்தின் தோல்விக்கு கதாபாத்திரத் தேர்வில் ஏற்பட்ட இந்த மாற்றமே முக்கிய காரணம் என அவர் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எம்.ஜி.ஆர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : விஜயாவிடம் பொய் சொல்லி எஸ்கேப் ஆன மனோஜ்... கல்யாண வீட்டில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image2
Actress: ஆமீர் கான் மகனுடன் முதல் படம் ஃபிளாப்; இப்போது இந்தியாவின் காஸ்ட்லி படத்தில் ஹீரோயின்!
Recommended image3
சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகைகள்.... இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷனில் அன்லிமிடெட் கவர்ச்சிகாட்டி கோடிக்கணக்கில் வசூல் வேட்டை
Related Stories
Recommended image1
எம்ஜிஆர் விட்ட சாபம் அப்படியே நடக்குது.! நடிகர் சிவக்குமார் வெளியிட்ட சுவாரஸ்யம்.!
Recommended image2
Now Playing
வீரத்தை ஊட்டி வளர்த்த எம்ஜிஆர்... மறக்கப்பட்ட போர்க்கலைகளின் மீட்பர்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved