நான் பயப்படுறது ரெண்டே பேருக்கு தான்... சூப்பர்ஸ்டார் டைட்டில் பஞ்சாயத்து குறித்து அனல்பறக்க பேசிய ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து தொடர்ந்து சர்ச்சை எழுந்து வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் அதுகுறித்து பேசி உள்ளார்.
சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்துக்கு சொந்தக்காரராக இருப்பவர் ரஜினிகாந்த், அவரிடம் இருந்து இந்த பட்டத்தை பறிக்க மறைமுகமாக பல்வேறு போட்டிகள் நடக்கிறது. இதற்காக ரசிகர்கள் மோதிக்கொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறி உள்ளன. இந்த சூப்பர்ஸ்டார் டைட்டிலுக்கு போட்டி போடுபவர்களை எச்சரிக்கும் விதமாக ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹுகூம் பாடல் வரிகள் இடம்பெற்று இருந்தன. அப்பாடல் வெளியானபோது விஜய்யை விமர்சித்து தான் இந்த பாட்டு எழுதப்பட்டு உள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் விவாதங்களும் நடந்தன.
இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், இந்த சூப்பர்ஸ்டார் டைட்டில் சர்ச்சை குறித்தும் பேசி உள்ளார். அவர் கூறியதாவது : “ஹுகூம் பாடல் வரிகளை முதலில் நான் பார்த்தபோது தாறுமாறாக இருக்குனு சொன்னேன். அதேபோல் அதில் இருக்கும் சூப்பர்ஸ்டார்-ங்கிறத மட்டும் நீக்க சொன்னேன். சூப்பர்ஸ்டார் டைட்டில் என்னைக்குமே தொல்லை தான்.
இதையும் படியுங்கள்... பீஸ்ட் ரிசல்ட் பார்த்துட்டு... நெல்சன் வேண்டாம் மாத்துங்கனு சொன்னாங்க - ஓப்பனாக பேசிய சூப்பர்ஸ்டார்
இப்போ மட்டுமல்ல, பல வருடங்களுக்கு முன்னாடியே நான் சூப்பர்ஸ்டார் டைட்டிலை நீக்க சொன்னேன். அப்போ நான் பயந்துவிட்டதா சொன்னார்கள். உண்மையில் நான் பயப்படுவது ரெண்டே பேருக்கு தான், ஒன்னு கடவுள், இன்னொன்னு நல்ல மனிதர்கள். நான் இதை சொன்னவுடன், இவரை தான் சொல்றேன்னு சோசியல் மீடியால சொல்லுவாங்க.
குரைக்காத நாயும் இல்ல, குறை சொல்லாத வாயும் இல்ல, ரெண்டும் இல்லாத ஊரும் இல்ல. நம்ம வேலைய பார்த்துட்டு நேரா போயிட்டே இருக்கனும். பெரிய ஆளோட புள்ளனு சொல்றது ஈஸி, அந்த பெயரை காப்பாத்துறது ரொம்ப கஷ்டம் என தன் பாணியில் செம்ம பஞ்ச் டயலாக் உடன் தன் பேச்சை நிறைவு செய்து இருக்கிறார் ரஜினி. சமூக வலைதளங்களில் தற்போது ரஜினியின் பேச்சு தான் செம்ம டிரெண்டிங் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... காக்கா - கழுகை உதாரணமாக வைத்து குட்டி கதை கூறி... ரசிகர்களை குழம்ப வைத்த சூப்பர் ஸ்டார்!