MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தடபுடலாக ரெடியாகும் ரஜினிகாந்தின் ஜெயிலர் பணிகள்..எப்ப..எங்க சூட் தெரியுமா?

தடபுடலாக ரெடியாகும் ரஜினிகாந்தின் ஜெயிலர் பணிகள்..எப்ப..எங்க சூட் தெரியுமா?

ஜெயிலர் படம் குறித்த புதிய அப்டேட்டாக  இந்த படம் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் படப்பிடிப்புக்கு வரும் என தெரிகிறது. இதற்காக சென்னைக்கு அருகில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

2 Min read
Author : Kanmani P
Published : Jul 21 2022, 07:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
jailer movie will have big set in ramoji rao film city shoot from august

jailer movie will have big set in ramoji rao film city shoot from august

கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கினார்  நெல்சன் திலீப்குமார். ராணுவ அதிகாரியாக விஜய் நடித்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதற்கென டெல்லியில் பிரம்மாண்ட மால் போன்ற செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் நல்ல கலெக்ஷனை கொண்டது.

மேலும் செய்திகளுக்கு..சிக்கென மாறிய ஹன்ஷிகா..பளபளக்கும் புடவையில் பக்காவான கிளாமர் போஸ்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான பீஸ்ட்டை தொடர்ந்து மீண்டும் அதே தயாரிப்பில் நெல்சன் கமிட் ஆனார். பீஸ்ட் படப்பிடிப்பின் போதே ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற இயக்குனர்அதற்கான துணுக்குகளை அப்போது கொடுத்து இருந்தார். பின்னர் சன் பிக்சர்ஸ், அனிருத் ,நெல்சன் சூப்பர் ஸ்டார் இடம்பெற்ற ப்ரோமோவை வெளியிட்டு கன்ஃபார்ம் செய்தது.

23

அடுத்து ரஜினியின் 169 வது படமான இந்த படத்திற்கு ஜெயிலர் என பேரிடப்பட்டுள்ளதாக ஒரு போஸ்டரையும் வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம். அந்த போஸ்டரில் கத்தியில்  ரத்தத்துடன் ரஜினி அமர்ந்திருப்பது போன்ற போஸ் இருந்தது. இதனால் ஒருவேளை இந்த படம் பேட்ட மாடலில் இருக்குமோ என சந்தேகமும் எழுந்தது.

மேலும் செய்திகளுக்கு...கடுமையான சண்டை பயிற்சி எடுக்கும் சமந்தா? அட்வைஸ் கொடுத்த ஹாலிவுட் பிரபலம் !

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், சிவ ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். ரஜினிக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் சிவ ராஜ்குமார் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

33

ஜெயிலர் படத்திற்கான திரைக்கதையை பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயற்றியுள்ளார். நெல்சன் உடன் மீண்டும் கைகோர்த்துள்ள அனிரூத், ரஜினி 169 வது படத்தில் இசையமைக்க உள்ளார். கலாநிதி மாறன், நெல்சன், அனிரூத் கூட்டணியில் உருவாகும் இந்த படம் குறித்து எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துள்ளனர்.

இறுதியாக ரஜினி சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகியிருந்தது. படம் போதுமான வரவேற்பு பெறவில்லை இதனால் நெல்சன் உடன் ரஜினி கைகோர்த்துள்ள படம் குறித்த அதிக ஆவல் எழுந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு...கப்பல் போன்ற காரில் வந்திறங்கிய தளபதி...அன்சீன் வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்

இந்நிலையில் ஜெயிலர் படம் குறித்த புதிய அப்டேட்டாக  இந்த படம் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் படப்பிடிப்புக்கு வரும் என தெரிகிறது. இதற்காக சென்னைக்கு அருகில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
திருமண நேரத்தில் 'நான் வாழ்வதே உங்களால்' என உருகிய ராஷ்மிகா: என்ன காரணம் தெரியுமா?
Recommended image2
தமிழ் ரசிகர்களின் 'கனவுக்கன்னி'க்கு அடித்த ஜாக்பாட்! பாலிவுட் செல்லும் ருக்மிணி வசந்த்!
Recommended image3
போலீஸ் ஸ்டேஷன், கேஸுன்னு வந்துட்டா குடும்பமா ஒன்னு சேர்ந்த கோமதி அண்ட் கோ! பாண்டியன் ஸ்டோர்ஸில் அதிரடி திருப்பம்!"
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved