MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காணாமல் போன முக்கிய பொருள்... ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்

காணாமல் போன முக்கிய பொருள்... ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யா, காணாமல் போன முக்கிய பொருளை கண்டுபிடித்து தரக்கோரி போலீசில் புகார் அளித்து உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : May 10 2023, 11:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா, செளந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே சினிமாவில் இயக்குனராக பணியாற்றி உள்ளனர். இதில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷின் 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி உள்ளார். தற்போது லால் சலாம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கிறார். அதேபோல் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, ரஜினி நடித்த கோச்சடையான், தனுஷின் விஐபி 2 போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

ரஜினியின் இளைய மகள் செளந்தர்யாவுக்கு முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து அவர் இரண்டாவதாக விசாகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்தாண்டு குழந்தை பிறந்தது. செளந்தர்யா தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். 

இதையும் படியுங்கள்... காசுக்காக இப்படியா வாய்கூசாம பொய் சொல்லுவீங்க... நடிகை ராஷ்மிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?

34

அந்த புகாரில் தனது சொகுசு காரின் சாவி தொலைந்துபோய் விட்டதாகவும் அதனை கண்டுபிடித்து தருமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சென்னை கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்தபோது தன்னுடைய கார் சாவி தொலைந்து போனதாகவும், அதனை கண்டுபிடித்து தருமாறும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். செளந்தர்யாவின் புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

44

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது வீட்டில் இருந்து 200 பவுன் தங்க, வைர நகைகள் திருடுபோனதாக புகார் அளித்திருந்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவரது வீட்டில் பணியாற்றிய ஈஸ்வரி என்கிற பணிப்பெண் திருடியது கண்டுபிடிக்கப்பட்டு, அவரிடம் இருந்து சொத்து பத்திரங்களும், நகைகளும் மீட்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது அவரது தங்கை செளந்தர்யாவும் போலீசில் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... அது உங்க பேத்தி மாதிரி... 600 மார்க் எடுத்த மாணவியை இப்படி சொல்லலாமா! வைரமுத்துவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Recommended image2
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Recommended image3
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved