MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காசுக்காக இப்படியா வாய்கூசாம பொய் சொல்லுவீங்க... நடிகை ராஷ்மிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?

காசுக்காக இப்படியா வாய்கூசாம பொய் சொல்லுவீங்க... நடிகை ராஷ்மிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?

தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, விளம்பரத்தில் நடித்துள்ளதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். 

2 Min read
Author : Ganesh A
Published : May 10 2023, 09:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தமிழிலும் சுல்தான், வாரிசு போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கைவசம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக உள்ள ராஷ்மிகாவுக்கு விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பும் குவிந்த வண்ணம் உள்ளன.

24

நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா. இதுதவிர தமிழில் இவர் கைவசம் ரெயின்போ என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... திரிஷாவின் மாஜி காதலனுடன் டேட்டிங் சென்ற பிக்பாஸ் நடிகை... நெருக்கமாக இருக்கும் போட்டோவால் வெளிவந்த உண்மை

34

அதேபோல் இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் என்கிற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இவ்வாறு படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகாவுக்கு விளம்பர வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. அந்த வகையில் இவர் சமீபத்தில் நடித்த மெக் டொனால்ட்ஸ் விளம்பரம் மிகவும் வைரலானதோடு, ராஷ்மிகாவை சர்ச்சையிலும் சிக்க வைத்துள்ளது. அந்த விளம்பரத்தால் தற்போது ராஷ்மிகாவை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

44

மெக் டொனால்ட்ஸ் நிறுவனம் சமீபத்தில் பிரைடு சிக்கன் பர்கரை அறிமுகம் செய்தது. அந்த விளம்பரத்தில் நடித்தது தான் தற்போது ராஷ்மிகாவுக்கு தலைவலியாக மாறி உள்ளது. நடிகை ராஷ்மிகா, தான் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவேன் என்று பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கிறார். அப்படி கூறிவிட்டு காசுக்காக அவர் அசைவ உணவுகளை விளம்பரம் செய்துள்ளதை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர். காசுக்காக இப்படியா வாய்கூசாம பொய் சொல்லுவீங்க என ராஷ்மிகாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராஷ்மிகா மந்தனா

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved