- Home
- Cinema
- திரிஷாவின் மாஜி காதலனுடன் டேட்டிங் சென்ற பிக்பாஸ் நடிகை... நெருக்கமாக இருக்கும் போட்டோவால் வெளிவந்த உண்மை
திரிஷாவின் மாஜி காதலனுடன் டேட்டிங் சென்ற பிக்பாஸ் நடிகை... நெருக்கமாக இருக்கும் போட்டோவால் வெளிவந்த உண்மை
நடிகை திரிஷாவின் மாஜி காதலனான வருண் மணியன் உடன் டேட்டிங் செய்தது உண்மை தான் என பிக்பாஸ் நடிகை ஒருவர் சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

வெப்பம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிந்து மாதவி. இதையடுத்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து பேமஸ் ஆனார். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக எண்ட்ரி கொடுத்து இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தினார். தமிழ் பிக்பாஸில் டைட்டில் வெல்ல முடியாவிட்டாலும், தெலுங்கு பிக்பாஸில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனார்.
பிக்பாஸ் வெற்றிக்கு பின் நடிகை பிந்து மாதவிக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது, நியூ சென்ஸ் என்கிற வெப்தொடரில் நடித்துள்ளார் பிந்து மாதவி. ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இந்த வெப் தொடருக்கான புரமோஷன் பணிகள் தற்போது படு ஜோராக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் திரிஷாவின் மாஜி காதலனான வருண் மணியன் உடன் டேட்டிங் செய்தது குறித்து ஓப்பனாக பேசி உள்ளார் பிந்து மாதவி.
இதையும் படியுங்கள்... அடடா... படிப்பிலும் நடிகை தேவயானி பொண்ணு சமத்து தான்! +2 மதிப்பெண் குறித்து வெளியான தகவல்!
நடிகை திரிஷாவும், தயாரிப்பாளர் வருண் மணியனும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணமும் நிச்சயம் ஆனது. ஆனால் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்த இந்த ஜோடி, திருமணத்தையும் நிறுத்திவிட்டனர். திரிஷாவை பிரிந்த சில ஆண்டுகளுக்கு பின்னர் வருண் மணியன் பிக்பாஸ் பிரபலம் பிந்து மாதவி உடன் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் பரவியதோடு, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின.
ஆனால் இதுகுறித்து அந்த சமயத்தில் விளக்கம் அளித்த வருண் மணியன், தான் பிந்து மாதவி உடன் டேட்டிங் செய்யவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். இந்நிலையில், நடிகை பிந்து மாதவி முதன்முறையாக வருண் மணியன் உடன் டேட்டிங் செய்தது குறித்து பேசி உள்ளார். அதன்படி 2017-ம் ஆண்டு தானும் வருண் மணியனும் மாலத்தீவில் டேட்டிங் செய்ததாக கூறினார். மேலும் வருண் மணியனும் திரிஷாவும் காதலித்தபோது தாங்கள் டேட்டிங் செய்யவில்லை என்றும், அவர்கள் இருவரும் பிரிந்த பின்னரே டேட்டிங் செய்ததாகவும் பிந்து மாதவி விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!