40 வயதில்.. ஹீரோயின்களுக்கு நிகராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடத்திய போட்டோ ஷூட்! மாடர்ன் உடையில் மிரள வைத்த போஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மாடர்ன் லுக்கில், முன்னணி நடிகைகளுக்கு நிகராக எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கணவர் தனுஷை விவாகரத்து செய்த பின்னர், சமூக வலைத்தளத்தில் படு ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி தன்னுடைய உடல் பயிற்சி வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் மகன்களுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அப்படி இவர் போடும் அனைத்து போஸ்டுகளுக்குமே நெட்டிசன்கள், தங்களுடைய கருத்தை தெரிவித்து லைக்குகளை குவித்து வருகிறார்கள். குறிப்பாக தனுஷை பிரிந்த பின்னர் ஐஸ்வர்யா அதிகம் ஆன்மீகத்தில் கவனம் செலுத்தி வருவதையும், மீண்டும் படம் இயக்கும் பணிகளை கையில் எடுத்துள்ளதும் அனைவரும் அறிந்ததே.
மேலும் செய்திகள்: ஓணம் பண்டிகையை கூட... கவர்ச்சிக்கு குறைவில்லாமல் கொண்டாடும் சாக்ஷி அகர்வால்! லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்!
இவருக்கு 40 வயது ஆனாலும், இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு தாயாகிவிட்ட போதிலும், கடின உடல்பயிற்சி மூலம், பார்ப்பதற்கு 25 வயது பெண் போலவே தோற்றமளிக்கிறார். அதே போல் எந்த உடை அணிந்தாலும் இவருக்கு பொருத்தமாக இருக்கிறது.
இந்நிலையில் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, செம்ம ஸ்டைலிஷான கோட் மற்றும் பேன்ட் அணிந்து படு மாடர்ன் லுக்கில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. பலரும் உண்மையில் உங்களுக்கு 40 வயதா? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: அப்பாவை விட வயதில் மூத்த வில்லன் நடிகருக்கு 4-வது மனைவியான அஞ்சு..! ஒரே வருடத்தில் பிறந்தது ஏன்?