RRR Box Office : உலகளவில் நம்பர் 1.... ஹாலிவுட் படங்களை பின்னுக்குத் தள்ளி பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் RRR
RRR Box Office : ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளது.
ரூ.500 கோடி பட்ஜெட்
பிரபல தெலுங்கு நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ராஜமவுலி இயக்கியுள்ள இப்படத்தில் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். வரலாற்றுப் பின்னணியில் தயாராகி இருந்த இப்படம் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி இருந்தது.
5 மொழிகளில் ரிலீஸ்
இப்படத்தை முதலில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். அந்த சமயத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக மார்ச் 25-ந் தேதி இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது.
உலகளவில் நம்பர் 1
இப்படத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக உலக அளவில் 21 பிரதேசங்களில் மட்டுமே வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் 6.32 மில்லியன் யுஎஸ் டாலர்கள் வசூலித்து, உலக பாக்ஸ் ஆபீஸில் கடந்த வார இறுதியில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்கிற பெருமையுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
RRR Movie
பேட்மேன் வசூலை முந்தியது
இதற்கு அடுத்த படியாக 77 பிரதேசங்களில் வெளியான 'தி பேட்மேன்' என்கிற ஹாலிவுட் படம் 4.55 மில்லியன் யுஎஸ் டாலர்கள் வசூலித்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. பேட்மேன் படத்தை விட குறைவான பிரதேசங்களில் வெளியானாலும் அதிக வசூலைப் பெற்று சாதனை படைத்துள்ளது 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம். உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ஒரு இந்தியத் திரைப்படம், முதலிடத்தை பிடிப்பது என்பது கொண்டாடப்பட வேண்டிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Will Smith : ஆஸ்கர் விழாவில் தொகுப்பாளருக்கு அறைவிட்ட சம்பவம்... மன்னிப்பு கோரினார் நடிகர் வில் ஸ்மித்