சிறுவயதில் அச்சு அசல் சிவாங்கி போலவே இருக்கும் ராதிகா... வைரலாகும் சரத்குமார் மனைவியின் Childhood போட்டோ
ராதிகாவின் குழந்தைப் பருவ புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவர் அச்சு அசல் சிவாங்கி போலவே இருப்பதை ஆச்சர்யத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ராதிகா. இவர் ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கிய ராதிகா, அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஏற்கனவே நடிகை ராதிகா நடிப்பில் ஒளிபரப்பான சித்தி, அண்ணாமலை, வாணி ராணி, சித்தி 2 போன்ற சீரியல்கள் சக்கைப்போடு போட்ட நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உடன் இணைந்து புதிய சீரியல் ஒன்றில் நடிக்க தயாராகி வருகிறாராம் ராதிகா. கிழக்கு வாசல் என பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலை ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாம்.
இதையும் படியுங்கள்... ரோபோ சங்கருக்கு என்னாச்சு? லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்- எப்படி இருந்த மனுஷன், இப்படி ஆகிட்டாரே
இப்படி நடிப்பில் பிசியாக இருக்கும் ராதிகாவின் குழந்தைப் பருவ புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. ஆடை அணிகலன்களுடன் குட்டி இளவரசி போல் காட்சியளிக்கும் ராதிகாவை பார்க்கும்போது, ஒரு சாயலில் அவர் அச்சு அசல் சின்னத்திரை பிரபலம் சிவாங்கியைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். இருவரையும் ஒப்பிட்டு பதிவிட்டு வரும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றன.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சிவாங்கி, பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி கலக்கினார். மூன்று சீசன்களாக கோமாளியாக வந்த சிவாங்கி, தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் குக் ஆக களமிறங்கி அசத்தி வருகிறார். இதுதவிர டான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் நகைச்சுவை நடிகையாகவும் நடித்து சினிமாவிலும் சிவாங்கி படிப்படியாக பிசியாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... shruti Haasan : நீங்க வெர்ஜினா?... நெட்டிசனின் எடக்குமுடக்கான கேள்விக்கு தரமான பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன்