- Home
- Cinema
- RRR படத்தால் இரண்டே வாரத்தில் முடிவுக்கு வந்தது பிரபாஸின் ரூ.300 கோடி பிரம்மாண்டம் - எவ்வளவு நஷ்டம் தெரியுமா?
RRR படத்தால் இரண்டே வாரத்தில் முடிவுக்கு வந்தது பிரபாஸின் ரூ.300 கோடி பிரம்மாண்டம் - எவ்வளவு நஷ்டம் தெரியுமா?
Radhe shyam : இன்று வெளியாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தால் ராதே ஷ்யாம் படம் பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பிரபாஸின் ரூ.300 கோடி பிரம்மாண்டம் முடிவுக்கு வந்துள்ளது.

பாகுபலி நாயகன் பிரபாஸ்
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பாப்புலர் ஆனவர் பிரபாஸ். இதையடுத்து இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தான் தயாரிக்கப்படுகிறது. பாகுபலி 2 படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படம் கடும் தோல்வியை சந்தித்தது.
ரூ.300 கோடி பட்ஜெட்டில் ராதே ஷ்யாம்
இதையடுத்து பிரபாஸ் நடிப்பில் உருவாகிய படம் தான் ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ண குமார் இயக்கியிருந்த இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட இப்படம் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்தது. இப்படத்திற்காக செட் அமைக்கும் பணிகளுக்கு மட்டும் ரூ.100 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்டது.
கடும் தோல்வியை சந்தித்த பிரபாஸ்
ராதே ஷ்யாம் படம் கடந்த மார்ச் 11-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசானது. பிரபாஸ் என்றாலே ஆக்ஷனுக்கு பெயர்போனவர். அப்படிப்பட்ட நடிகரின் படத்தின் ஆக்ஷனே இல்லை என்றால் மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். அதனால் தெலுங்கை தவிர்த்து வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் இப்படம் கடும் தோல்வியை சந்தித்துள்ளது.
இழப்பு எவ்வளவு?
ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு வாரத்தில் ரூ.200 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதனால் இப்படம் சுமார் ரூ.100 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் இழப்பை ஈடுகட்டும் வகையில் இப்படத்துக்காக தான் வாங்கிய ரூ.100 கோடி சம்பளத்தில் இருந்து ரூ.50 கோடியை நடிகர் பிரபாஸ் விட்டுக்கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்.ஆர்.ஆர் படத்தால் வந்த சிக்கல்
இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தால் ராதே ஷ்யாம் படம் பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பிரபாஸின் ரூ.300 கோடி பிரம்மாண்டம் முடிவுக்கு வந்துள்ளது. பிரபாஸ் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளதால், அவரின் மார்க்கெட் சரிவை சந்தித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... RRR movie Review : ராஜமவுலி சாதித்தாரா?... சோதித்தாரா? - ஆர்.ஆர்.ஆர் படத்தின் டுவிட்டர் விமர்சனம்