RRR movie Review : ராஜமவுலி சாதித்தாரா?... சோதித்தாரா? - ஆர்.ஆர்.ஆர் படத்தின் டுவிட்டர் விமர்சனம்
RRR movie Review : ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் டுவிட்டர் விமர்சனம்.
ரிலீசானது ஆர்.ஆர்.ஆர்
பாகுபலி 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பிரபல தெலுங்கு நடிகர்களான ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
ரூ.500 கோடி பட்ஜெட்
சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படம் இன்று உலகம் முழுவதிலும், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீசாகி உள்ளது. கீரவாணி இசையமைத்துள்ள இப்படத்துக்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
டுவிட்டர் விமர்சனம்
சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமராம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படம் குறித்த டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
ஆர்.ஆர்.ஆர் படத்தை டென்மார்க்கில் பார்த்ததாகவும், படம் சிறப்பாக இருந்ததாகவும், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இரண்டு சூப்பர் ஹீரோக்களின் ரசிகர்களின் இப்படம் விருந்தாக இருக்கும் எனவும் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ்நாடு மற்றும் கேரள ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும். இந்தி மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு இது ஒரு ஆவரேஜ் படமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது மிகப்பெரிய ஹிட்டாக வாய்ப்பில்லை எனவும், பாகுபலி ரேஞ்சுக்கு இல்லை எனவும் பதிவிட்டுள்ளார். அவ்ளோ சீன் இல்லப்பா என அந்த டுவிட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் இண்டர்வல் சீன் சிறப்பான ஒன்றாக இருந்ததாகவும், இதுவரை இந்திய சினிமாவில் அப்படி ஒரு காட்சியை பார்த்ததில்லை என பதிவிட்டுள்ளார். காட்சிகளைப் பொருத்தவரை இது ராஜமவுலியின் மாஸ்டர் கிளாஸ் என்றும் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணின் நடிப்பு அட்டகாசம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நீரும், நெருப்பும் நாயகர்கள், ஜூனியர் என்.டி,ஆர் மற்றும் ராம்சரண் ஆயுதங்கள். நீரையும் நெருப்பையும் பயன்படுத்தி ராஜமவுலி ரசிகர்களுக்காக பிரியாணியே சமைத்து கொடுத்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
முதல் பாதி மெதுவாக ஆரம்பித்து இடைவேளையின் போது சூடுபிடித்ததாகவும், பின்னணி இசை சொதப்பல் என்றும், கதைப்படி பார்த்தால் பாகுபலி 2-வை விட ஆர்.ஆர்.ஆர் குறைவு தான் என பதிவிட்டுள்ளார்.
படத்தின் ஹைலைட் என்றால் அது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பு என்றும், அனைத்து ஆக்ஷன் காட்சிகளும் சிறப்பாக உள்ளதாகவும் குறிப்பாக இண்டர்வல் சீன் வேறலெவல் என்றும் குறிப்பிட்டுள்ளார். 2-ம் பாதி சற்று தொய்வை ஏற்படுத்தி உள்ளதாகவும், ராஜமவுலியின் மேஜிக் மிஸ் ஆகி உள்ளதாகவும் இந்த டுவிட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடக்கடவுளே... ராஜமவுலியின் முதல் ஃபிளாப் இது. இப்படத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் வந்து பார்ப்பது கடினம். 2-ம் பாதி எதிர்பார்த்த அளவு இல்லை என பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை வைத்து பார்க்கும் போது இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.