- Home
- Cinema
- புஷ்பா நாயகனுக்கு கிடைத்த அங்கீகாரம்... அமெரிக்காவில் இந்திய தேசிய கொடியுடன் வலம் வர உள்ள அல்லு அர்ஜுன்
புஷ்பா நாயகனுக்கு கிடைத்த அங்கீகாரம்... அமெரிக்காவில் இந்திய தேசிய கொடியுடன் வலம் வர உள்ள அல்லு அர்ஜுன்
Allu Arjun : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வருகிற ஆகஸ்ட் 21-ந் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின கொண்டாட்ட பேரணியில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொள்ள உள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். அங்கு இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அலவைகுந்தபுரமுலு மற்றும் புஷ்பா ஆகிய இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தன. இதனால் இவர் அடுத்ததாக நடிக்க உள்ள படங்கள் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக இவர் நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு ரிலீசான அலவைகுந்தபுரமுலு திரைப்படத்திற்கு அண்மையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அப்படத்தில் சிறந்த பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் தமனுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இதையும் படியுங்கள்... இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல... அதற்குள் ஷங்கர் மகளுக்கு இவ்வளவு சம்பளமா..! வெளியான ஷாக்கிங் தகவல்
செம்மரக்கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் உலகளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. புஷ்பா தி ரூல் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வருகிற ஆகஸ்ட் 21-ந் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின கொண்டாட்ட பேரணியில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளாராம். இதுவே வெளிநாடுகளில் நடைபெறும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் மிகப்பெரிய பேரணி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Vijay Sethupathi : யம்மாடியோ... ஒரே மாதத்தில் ரூ.80 கோடியா..! காஸ்ட்லி வில்லனாக உயர்ந்த விஜய் சேதுபதி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.