MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vijay Sethupathi : யம்மாடியோ... ஒரே மாதத்தில் ரூ.80 கோடியா..! காஸ்ட்லி வில்லனாக உயர்ந்த விஜய் சேதுபதி

Vijay Sethupathi : யம்மாடியோ... ஒரே மாதத்தில் ரூ.80 கோடியா..! காஸ்ட்லி வில்லனாக உயர்ந்த விஜய் சேதுபதி

Vijay Sethupathi : விக்ரம் படம் ரிலீசான ஒரே மாதத்தில் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, ஷாருக்கானின் ஜவான் உள்பட 3 படங்களில் வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் விஜய் சேதுபதி. 

2 Min read
Author : Ganesh A
Published : Aug 09 2022, 11:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் அறிமுகமான பின்னர் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று இல்லாமல், வில்லன், குணச்சித்திர வேடங்கள், கெஸ்ட் ரோல் என பாகுபாடு பார்க்காமல் நடித்து வருகிறார். இதன் காரணமாகவே அவருக்கான ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீப காலமாக இவர் கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட் போன்ற பிற மொழி படங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகின்றார்.

24

குறிப்பாக விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்த பின்னர், நடிகர் விஜய் சேதுபதிக்கு வில்லன் வாய்ப்புகள் அதிகளவில் குவிந்து வருகின்றன. விக்ரம் படம் ரிலீசான ஒரே மாதத்தில் அவர் 3 படங்களில் வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். அதில் அவர் முதலாவதாக கமிட்  ஆன படம் புஷ்பா 2. இப்படத்தின் முதல் பாகத்திலேயே வில்லனாக நடிக்க இருந்த விஜய் சேதுபதி கடைசி நேரத்தில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகினார்.

இதையும் படியுங்கள்... இடிந்து கிடந்த அரசுப்பள்ளி.. நண்பனுடன் சேர்ந்து சீரமைத்து கொடுத்த கார்த்தி- ரியல் ஹீரோ என பாராட்டும் ரசிகர்கள்

34

ஆனால் இந்த முறை இவருக்கென பலமான வில்லன் வேடம் ஒன்றை உருவாக்கி உள்ளாராம் இயக்குனர் சுகுமார். இதன்பின்னர் பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் விஜய் சேதுபதி. அதேபோல் தெலுங்கில் பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக நடிக்கவும் ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளார் மக்கள் செல்வன்.

44

இந்த மூன்று பட வாய்ப்புகளும் கடந்த ஒரே மாதத்தில் கிடைத்துள்ளன. இதற்காக அவர் வாங்கிய சம்பள விவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி ஜவான் படத்திற்காக ரூ.30 கோடியும், புஷ்பா 2 மற்றும் பாலகிருஷ்ணா படத்துக்காக தலா ரூ.25 கோடி என மொத்தம் ரூ.80 கோடி சம்பளமாக பெற ஒப்பந்தம் செய்துள்ளாராம் விஜய் சேதுபதி. இதன்மூலம் இவர் இந்திய சினிமா உலகின் காஸ்ட்லி வில்லனாக உருவெடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... டிக் டாக்கில் பிரபலமாவது எப்படி? சொல்லித் தரவா! லாட்ஜிக்கு வரவழைத்து மாணவி பலாத்காரம்! பல உல்லாச வீடியோக்கள்.!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் சேதுபதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!
Recommended image2
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Recommended image3
வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் விஜய் - சொத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு; புயலை கிளப்பிய சங்கீதா புதிய மனு தாக்கல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved