- Home
- Cinema
- MGR Biopic: அன்று பசும்பொன் தேவர், இன்று மக்கள் திலகம்... எம்.ஜி.ஆர் கெட்டப்பில் ஜெ.எம்.பஷீர்; முதன்முறையாக படமாகிறது எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு!
MGR Biopic: அன்று பசும்பொன் தேவர், இன்று மக்கள் திலகம்... எம்.ஜி.ஆர் கெட்டப்பில் ஜெ.எம்.பஷீர்; முதன்முறையாக படமாகிறது எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு!
'புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்' பெயரில் உருவாகும் வாழ்க்கை வரலாற்று படம்! எம்.ஜி.ஆராக ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். அக்டோபர் 17-ல் ராமாவரம் தோட்டத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு படம்
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், மறைந்த மக்கள் திலகமுமான எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு, முதன்முறையாக அவரது பெயரிலேயே "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்" என்ற தலைப்பில் முழுநீளத் திரைப்படமாக உருவாகிறது.
எம்.ஜி.ஆரின் வரலாற்றுப் பயணம்
நாடக மேடையில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கி, பின்னர் வெள்ளித்திரையில் கதாநாயகனாக உயர்ந்து, தனது நடிப்பாலும் மனிதநேயத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் எம்.ஜி.ஆர். அரசியல் களத்தில் பேரறிஞர் அண்ணாவுடன் இணைந்து பயணித்த அவர், பின்னர் 17.10.1972 அன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) என்ற பெயரில் தனிக்கட்சியைத் தொடங்கி, தேர்தல் அரசியலில் களம் கண்டார்.
தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று, தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்தார். திரைப்படம், அரசியல், மக்கள் சேவை என பல்வேறு தளங்களில் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் வாழ்க்கை இன்றும் தலைமுறைகளைத் தாண்டி பேசப்படும் ஒன்றாக விளங்கி வருகிறது.
எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர்
"புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்" படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இவர் முன்னதாக "தேசிய தலைவர்" என்ற திரைப்படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடி அனுபவங்களுடன் களமிறங்கும் திரைக்கதை
இந்த திரைப்படம் வெறும் வாழ்க்கை வரலாற்றை மட்டும் பதிவு செய்யாமல், எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கை, திரைப்பயணம், அரசியல் வளர்ச்சி, மக்கள் தொடர்பு, மனிதநேயம் மற்றும் முதல்வராக அவர் ஆற்றிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களை காட்சிப்படுத்த உள்ளது.
இதற்காக, எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகி அவருடன் பயணித்தவர்கள், அவரது குடும்ப உறுப்பினர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், அவரது ஆட்சிக்காலத்தில் பணியாற்றிய அரசு அதிகாரிகள், சக நடிகர்-நடிகைகள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் ஆகியோரின் நேரடி அனுபவங்கள் மற்றும் நினைவுகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது.
ராமாவரம் தோட்டத்தில் படப்பிடிப்பு துவக்கம்; விரைவில் முழு அறிவிப்பு
எம்.ஜி.ஆர். அவர்கள் தனிக்கட்சி தொடங்கிய நாளான அக்.17-ஆம் தேதியன்று, அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்லத்தில் முக்கிய பிரபலங்கள் முன்னிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், பிற நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட முக்கிய திரைப்படக் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

