MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Anjali Marriage: கல்யாணம் எப்போ... யாரும் எதிர்பார்க்காத பதிலை சொல்லி அதிர்ச்சி கொடுத்த அஞ்சலி..!

Anjali Marriage: கல்யாணம் எப்போ... யாரும் எதிர்பார்க்காத பதிலை சொல்லி அதிர்ச்சி கொடுத்த அஞ்சலி..!

Anjali wedding plans : நடிகை அஞ்சலி கல்யாணம் பத்தி அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கு இப்போ செம மாஸான ஒரு பதில் சொல்லியிருக்காங்க. அவங்க சொன்ன அந்த சுவாரஸ்யமான பதில் என்னன்னு இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 28 2026, 07:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anjali wedding plans
Image Credit : our own

Anjali wedding plans

நடிகை அஞ்சலி தென்னிந்திய சினிமாவுல தன்னோட எதார்த்தமான நடிப்பால ரசிகர்களை கவர்ந்திருக்காங்க. இப்போ அவங்க கல்யாணம் பத்தின பேச்சுதான் சோஷியல் மீடியாவுல வைரல். கல்யாணத்துக்கு தனக்கு எந்த அவசரமும் இல்லைன்னு ரொம்ப கூலா சொல்லியிருக்காங்க அஞ்சலி. சமீபத்துல யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி கொடுத்தாங்க. அப்போ அவங்ககிட்ட, 'எப்போ கல்யாணம்?'னு திரும்பத் திரும்ப கேட்கப்படுற கேள்வி பத்தி கேட்டாங்க. "அது என் கல்யாணம், நான் பண்ணிப்பேன். மத்தவங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறைன்னு புரியல"னு தன்னோட ஸ்டைல்ல நச்சென்று பதில் சொல்லியிருக்காங்க.

பெற்றோர் ஆசை ஆசையாய் வைத்த பெயரை சினிமாவுக்காக தூக்கியெறிந்த நடிகைகளும்... அவர்களின் ஒரிஜினல் பெயர்களும்!!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அஞ்சலியின் பதில் என்ன?
Image Credit : Instagram

அஞ்சலியின் பதில் என்ன?

கல்யாணம்ங்கிறது ஒரு நாள் கொண்டாட்டம் கிடையாதுன்னு அஞ்சலி ஜாலியா கலாய்ச்சிருக்காங்க. "கல்யாணம் முடிஞ்சதும் எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு போயிடுவாங்க. நான் மட்டும்தான் அங்க இருப்பேன்"னு சொல்லி, கல்யாணம் பண்றவங்களோட மனநிலையை ரொம்ப எதார்த்தமா சொல்லியிருக்காங்க. தன்னோட நண்பர்களையும் அஞ்சலி சும்மா விடல. கல்யாணம்னா புது ட்ரெஸ் போடுறது, மேக்கப் பண்றது, போட்டோஷூட் நடத்துறதுன்னு நண்பர்கள் ரொம்ப ஆர்வமா இருக்காங்க. "நீங்க நல்லா ட்ரெஸ் பண்ணிட்டு ஜாலியா இருப்பீங்க"னு நண்பர்களைப் பார்த்து கலாய்ச்சிருக்காங்க அஞ்சலி.

34
தெளிவான முடிவு எடுத்த அஞ்சலி
Image Credit : Instagram

தெளிவான முடிவு எடுத்த அஞ்சலி

நண்பர்கள் ஜாலியா இருக்கணும்ங்கிறதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்கணுமான்னு அஞ்சலி கேள்வி எழுப்பியிருக்காங்க. "மணப்பெண்ணுக்கு நிஜமாவே கல்யாணத்துல சந்தோஷம் கிடைக்குதா? இல்ல அவங்க ஃப்ரெண்ட்ஸ் ட்ரெஸ் பண்ணிட்டு போட்டோ எடுக்குறதுதான் ஜாலியா?"னு ரொம்ப லாஜிக்கா கேட்டுருக்காங்க. இன்னும் ஒரு படி மேல போன அஞ்சலி, "நீங்களே கல்யாணம் பண்ணிக்கோங்க, நான் வந்து ஜாலியா கொண்டாடுறேன். நானும் நல்லா ட்ரெஸ் பண்ணிட்டு போட்டோஷூட் பண்ணிக்கிறேன்"னு நண்பர்கள்கிட்ட சொல்லிட்டாங்களாம். கல்யாணம் பத்தி கேட்குற நண்பர்களுக்கு இதுதான் அவங்களோட ரெகுலர் பதிலாம்.

44
சினிமாவில் செம பிஸி
Image Credit : Instagram

சினிமாவில் செம பிஸி

அஞ்சலியோட இந்த ஜாலியான பேட்டி இப்போ ரசிகர்களோட கவனத்தை ஈர்த்திருக்கு. கல்யாணத்துக்குன்னு எந்த ஒரு தேதியையோ நேரத்தையோ அவங்க இன்னும் முடிவு பண்ணல. அது தன்னோட தனிப்பட்ட முடிவுன்னும், தனக்கு தோணுறப்போ கல்யாணம் பண்ணிப்பேன்னும் ரொம்ப தெளிவா சொல்லியிருக்காங்க. அஞ்சலி இப்போ சினிமாவுல ரொம்ப பிஸியா இருக்காங்க. சமீபத்துல விஷால் நடிச்ச 'மகுடம்' படத்துல நடிச்சிருந்தாங்க. அடுத்து ராம் இயக்கத்துல சூரி, நிவின் பாலி கூட நடிச்சிருக்க 'ஏழு கடல் ஏழு மலை' படம் அக்டோபர் 1-ஆம் தேதி ரிலீஸாக இருக்கு.

பட வேலைகள்ல பிஸியா இருக்குறதால கல்யாணத்துக்கு இப்போதைக்கு அவசரப்படல அஞ்சலி. 'கல்யாணம் எப்போ?'னு கேட்குறவங்களுக்கு தன்னோட ஸ்டைல்ல பதில் சொல்லி, இது தன்னோட தனிப்பட்ட முடிவுங்கிறதை மறுபடியும் தெளிவுபடுத்தியிருக்காங்க.

Anjali : மினு மினுக்கும் மாம்பழ கலர்.. இளைத்துப்போன லுக்கில் அட்டகாச சிரிப்பில் மயக்கும் அஞ்சலி - Cool Pics!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
தமிழ் நடிகைகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Thriller Movies : குலை நடுங்க வைக்கும் 5 திரில்லர் படங்கள்! கிளைமாக்ஸ் வரை விலகாத மர்மம்!
Recommended image2
The Paradise: ட்ரோலுக்கு மத்தியில் 'தி பாரடைஸ்' வசூல் வேட்டை.. மாஸ் காட்டும் நானி.. கலெக்ஷன் எவ்வளவு?
Recommended image3
Suriya : முட்டாள்களுக்கு பதில் சொல்லாதீங்க... ரசிகர்களுக்கு சூர்யா சொன்ன அட்வைஸால் வெடித்த சர்ச்சை
Related Stories
Recommended image1
"முதலில் அந்த நடிகர்.. அப்புறம் ஒரு தொழில் அதிபர்".. திருமணம் குறித்த சர்ச்சை - கண்ணீர்விட்ட நடிகை அஞ்சலி!
Recommended image2
Anjali Photos : சேலையில் ரெட் ஹாட் ஏஞ்சலாக மாறிய நடிகை அஞ்சலி... கட்டழகை காட்டி மயக்கும் கவர்ச்சி போட்டோஸ் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved