- Home
- Gallery
- Anjali : மினு மினுக்கும் மாம்பழ கலர்.. இளைத்துப்போன லுக்கில் அட்டகாச சிரிப்பில் மயக்கும் அஞ்சலி - Cool Pics!
Anjali : மினு மினுக்கும் மாம்பழ கலர்.. இளைத்துப்போன லுக்கில் அட்டகாச சிரிப்பில் மயக்கும் அஞ்சலி - Cool Pics!
Actress Anjali : தமிழில் தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, இன்றளவும் சிறந்த நடிகையாக திகழ்பவர் தான் அஞ்சலி, அவருக்கு வயது 38.

anjali
ஆந்திராவில் கடந்த 1986ம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி பிறந்த நடிகை தான் அஞ்சலி. கடந்த 2006ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான "போட்டோ" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் தனது பயணத்தை தொடங்கினார்.
anjali photo gallery
அதன்பிறகு 2007ம் ஆண்டு பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான, ஜீவாவின் "கற்றது தமிழ்" என்கின்ற திரைப்படம் இவருக்கு தமிழ் மொழியில் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. அதன் பிறகு நல்ல பல படங்களில் அவர் நடிக்க தொடங்கினார்.
Anjali Photos
தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக சக்சஸ்ஃபுல் நாயகியாக பயணித்து வரும் அஞ்சலி, கடந்து சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதில்லை.
Kollywood Actress
இறுதியாக கடந்த 2020ம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான "பாவகதைகள்" என்கின்ற அந்தாலஜி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று இவர் நடித்திருந்தார்.