MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரூ.5 கோடி மோசடி... பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுகிறார் - நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

ரூ.5 கோடி மோசடி... பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுகிறார் - நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

Actor Vimal : நடிகர் விமல் மீது சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் கொடுத்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 20 2022, 10:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த நடிகர் விமல் கடந்த 2009-ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, களவாணி, கலகலப்பு, வாகை சூடவா என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆனார்.

24

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விலங்கு என்கிற வெப் தொடர் ஓடிடி-யில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதுதவிர ஏராளமான படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் விமல் மீது சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் கொடுத்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

34

சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த கோபி என்கிற சினிமா தயாரிப்பாளர் விமல் மீது கொடுத்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது :  களவாணி, களவாணி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் விமல், மன்னர் வகையறா படத்தை எடுத்தபோது என்னிடம் 5 கோடி ரூபாய் கடனாக வாங்கினார். மேலும் அந்தப் படத்தின் மூலம் வரும் லாபத்திலும் பங்கு தருவதாக என்னிடம் தெரிவித்தார். ஆனால், என்னிடம் வங்கிய கடன் தொகை ரூ.5 கோடியை நடிகர் விமல் இதுவரை திருப்பித்தரவில்லை. 

44

அவர் தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் எனக்கு தரவேண்டிய 5 கோடி ரூபாய் பணத்தை திருப்பித்தராமல் மோசடி செய்து வருகிறார். பணத்தை கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே நடிகர் விமல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, அவர் எனக்கு தரவேண்டிய 5 கோடி ரூபாய் பணத்தை வசூலித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்”  என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... Prabhas : ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம்... ராதே ஷ்யாம் படுதோல்வி அடைந்தது ஏன்? - நடிகர் பிரபாஸ் விளக்கம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image2
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image3
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved