Prabhas : ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம்... ராதே ஷ்யாம் படுதோல்வி அடைந்தது ஏன்? - நடிகர் பிரபாஸ் விளக்கம்
Prabhas : ராதே ஷ்யாம் படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து, அப்படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் பிரபாஸ் முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
ராஜமவுலி இயக்கிய பாகுபலி என்கிற பிரம்மாண்ட படைப்பில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் பிரபாஸ். இதையடுத்து இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியா படங்களாகத் தான் தயாரிக்கப்படுகிறது. பாகுபலி 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படம் கடும் தோல்வியைச் சந்தித்தது.
இதன்பின்னர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிய ராதே ஷ்யாம் படமும் மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாரானது. ராதா கிருஷ்ண குமார் இயக்கியிருந்த இப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். முழுக்க முழுக்க ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட படமாக தயராகி இருந்த இப்படம் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. குறிப்பாக இப்படத்திற்காக போடப்பட்ட செட்களின் மதிப்பு மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
ராதே ஷ்யாம் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியானது. ஆக்ஷனுக்கு பெயர்போன பிரபாஸ், ஆக்ஷன் காட்சிகள் இன்றி ஒரு படத்தில் நடித்தால் மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். அதனால் தெலுங்கை தவிர வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் இப்படம் ஃபிளாப் ஆனது.
ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் ரூ.100 கோடி மேல் இழப்பை சந்தித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதன் இழப்பை ஈடுகட்டும் வகையில் நடிகர் பிரபாஸ் தான் வாங்கிய சம்பளத்தில் இருந்து ரூ.50 கோடியை விட்டுக்கொடுத்து உதவிய சம்பவமும் அரங்கேறின.
இந்நிலையில், ராதே ஷ்யாம் படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து நடிகர் பிரபாஸ் முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது : “கொரோனா காரணமாக இருக்கலாம் அல்லது நாங்கள் ஸ்கிரிப்ட்டில் ஏதேனும் மிஸ் செய்து இருக்கலாம். மக்கள் என்னை அந்த ரோலில் பார்க்க விரும்பி இருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன்.
பாகுபலி வெற்றியால் நான் நடிக்கும் புது படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு அழுத்தம் இருப்பது உண்மை தான். ஆனால் எனக்கு அந்த மாதிரி அழுத்தம் எதுவும் இல்லை. பாகுபலி போன்ற படம் எனக்கு கிடைத்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். மக்களை தொடர்ந்து மகிழ்விக்க விரும்புகிறேன். அதற்காக தொடர்ந்து உழைக்கிறேன்” எனக் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... Blue sattai maran :மாஸ்டர் பட பிரபலத்தை பிட்டு பட நடிகர் என விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்.. கொந்தளித்த ரசிகர்கள்