Blue sattai maran :மாஸ்டர் பட பிரபலத்தை பிட்டு பட நடிகர் என விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்.. கொந்தளித்த ரசிகர்கள்

Blue sattai maran : ப்ளூ சட்டை மாறனின் செயல் ரசிகர்கள் பலரை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. வழக்கம்போல் அவரை டுவிட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

clash between Blue sattai maran and actor shanthanu

சினிமா படங்களை கடுமையாக விமர்சித்ததன் மூலம் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இதனால் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தாலும் தொடர்ந்து தனது வேலையை செய்து வருகிறார் மாறன். அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தை மோசமாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். இவரது விமர்சனத்துக்கு அஜித் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதேபோல் கடந்த வாரம் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தையும் இவர் விட்டுவைக்கவில்லை. இவ்வாறு அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களை விமர்சித்த மாறனுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் சிலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ஆரி, மாறனின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

மாறனைப் பற்றி ஆரி பேசிய வீடியோவை நெட்டிசன் ஒருவர் தரமான செருப்படி என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். அந்த பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்த நடிகர் சாந்தனு, சரியா சொன்ன மச்சி என ஆரியை பாராட்டி பதிவிட்டு இருந்தார். நடிகர் சாந்தனுவின் இந்த பதிவு மிகவும் வைரல் ஆனது.

மேலும் ‘ஒரு படைப்பை அல்லது படைப்பாளியை பயங்கரமா விமர்சனம் செய்யுறதுக்கும் இழிவுபடுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது’ என குறிப்பிட்டிருந்தார் சாந்தனு. இதையடுத்து சாந்தனுவின் பதிவுக்கு பதிலளித்துள்ள ப்ளூ சட்டை மாறன், அவரை பிட்டு பட நடிகர் என விமர்சித்து இருந்தார். மாறனின் இந்த செயல் ரசிகர்கள் பலரை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. வழக்கம்போல் அவரை டுவிட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  vairamuthu : நாய்களை கண்டுகொள்ளாதீர்கள்... அதுவே ஓடிவிடும் - மீடூ சர்ச்சை குறித்து மெளனம் கலைத்த வைரமுத்து

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios