vairamuthu : நாய்களை கண்டுகொள்ளாதீர்கள்... அதுவே ஓடிவிடும் - மீடூ சர்ச்சை குறித்து மெளனம் கலைத்த வைரமுத்து

vairamuthu : விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்தால், நாயோடு போராடுவது போலேயே வாழ்க்கை போய்விடும் என கவிஞர் வைரமுத்து கூறி உள்ளார்.

vairamuthu opens up about me too allegations against him

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் வைரமுத்து. இவர் மீது பிரபல பின்னணி பாடகியான சின்மயி, பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். வைரமுத்து மீது பாடகி சின்மயி தொடர்ந்து மீடூ புகார்களை முன்வைத்து வந்தாலும், இதுவரை சட்ட ரீதியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வந்த வைரமுத்து, சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து முதன்முறையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “உங்களைத் துரத்தும் நாயைக் கண்டுகொள்ளாமலே செல்ல வேண்டும். இல்லையெனில் அது உங்களைத் துரத்திக் கொண்டே வரும். 

விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்தால், நாயோடு போராடுவது போலேயே வாழ்க்கை போய்விடும். நாயைக் கண்டுகொள்ளாமல் ஓடிக் கொண்டே இருங்கள். நாய்கள் திரும்பி ஓடிவிடும்” எனக் கூறி உள்ளார். இதன்மூலம் தன்மீது வைக்கப்பட்டுள்ள மீடூ குற்றச்சாட்டுகளுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து. 

இதையும் படியுங்கள்.... Cobra movie : சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விக்ரமின் ‘கோப்ரா’?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios