சிங்கிள் பிளீட் சேலையில்... ஜிமிக்கி கம்மல் அழகி சுண்டி இழுக்கும் பிரியங்கா மோகன்! கியூட் போட்டோஸ்!
நடிகை பிரியங்கா அருள் மோகன், சாண்டில் நிற சேலை கட்டி... ஜிமிக்கி கம்மல் அழகில் சுண்டி இழுக்கும் வேற லெவல் கியூட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
குறுகிய சில வருடங்களிலேயே... முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடிக்கும் நடிகைகள் சிலரே, அந்த பட்டியலில் தற்போது இணைந்துள்ளவர் தான் 'டாக்டர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள பிரியங்கா மோகன்.
கடந்த 2019ஆம் ஆண்டு, கன்னட மொழியில் வெளியான "ஒந்து கதை ஹெல" என்கிற படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் பிரியங்கா மோகன்.
மேலும் செய்திகள்: லட்சத்தில் ஒருவருக்கு தான் இப்படி நடக்கும்! மீனா கணவர் மரணம் குறித்து கலா மாஸ்டர் வெளியிட்ட தகவல்!
இதை தொடர்ந்து, தெலுங்கி, தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார். குறிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த, பிளாக்பஸ்டர் திரைப்படமான டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது அடுத்தடுத்த தமிழ் பட வாய்ப்புகளை கைப்பற்றி வருகிறார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்தார்.
மேலும் செய்திகள்: துளியும் மேக்கப் இல்லாமல்... சாதாரண புடவையில் த்ரிஷா! வேற லெவல் அழகில் வெளியான ரீசென்ட் போட்டோஸ்!
இதை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகன், அவருடன் டான் படத்தில் நடித்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
தற்போது தமிழில் முன்னணி கதாநாயகி பட்டியலில் இணைந்துள்ள பிரியங்கா மோகன், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கைப்பற்றி வருகிறார். அதன்படி இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார். அதே போல், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 169 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது வரை இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.
மேலும் செய்திகள்: ரீல் மற்றும் ரியல் நம்பி நாராயணனை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி! காலில் விழுந்து ஆசிபெற்ற மாதவன்
குறுகிய நாட்களிலேயே சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பை கைப்பற்றி கெத்து காட்டி வரும் பிரியங்கா மோகன், தற்போது எலகண்டான சாண்டில் சில சேலையில், அழகிய ஜிமிக்கி கம்மலுடன் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.