லட்சத்தில் ஒருவருக்கு தான் இப்படி நடக்கும்! மீனா கணவர் மரணம் குறித்து கலா மாஸ்டர் வெளியிட்ட தகவல்!
நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்து ஒருமாதம் ஆகும் நிலையில், அவரது மரணம் குறித்து பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் முதல் முறையாக கூறியுள்ளார்.
தமிழ், திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும், பின்னர் தமிழ் மொழிலேயே ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர். மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர், பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளையாக, வித்யா சாகர் என்பவரை... கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்கிற பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. மீனா எப்படி குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகம் கொடுத்தாரோ... அதே போல் அவரது மகள் நைனிகாவும், தளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
மேலும் செய்திகள்: அப்பாவின் பிறந்தநாளுக்கு... சினேகா கொடுத்த எதிர்பாராத சர்ப்ரைஸ்! மனம் நெகிழ்ந்த தந்தை!
இந்நிலையில், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் எப்படி இறந்தார் என சில உண்மையான தகவல்கள் வெளியான போதிலும்.. அவ்வப்போது பல்வேறு வதந்திகளும் வெளியாகி வருகிறது. தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என, நடிகை மீனா கேட்டு கொண்டபோதிலும், மீண்டும் சிலர் வாந்திகளை பரப்பி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: பொதுவெளியில் செக்ஸ்... விஜய் தேவரகொண்டாவின் பதிலால் ஷாக்கான ரசிகர்கள்!
இந்நிலையில், நடிகை மீனாவின் நெருங்கிய தோழியும்... பிரபல நடன இயக்குனருமான கலா மாஸ்டர், வித்யா சாகர் மரணத்திற்கு என்ன காரணம் என்பதை கூறியுள்ளார். இது குறித்து அவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில்... "பாம்பேவில் இருக்கும் புறா எச்சத்தை, சுவாசித்தாலே தவறு என சொல்வார்கள். பெங்களூரில் அந்த புறாக்கள் நிறைய இருக்கிறது. இப்படி பட்ட பிரச்சனை, லட்சத்தில் ஒருவருக்கு தான் ஏற்படும். அந்த ஒவ்வாமை சாகருக்கு வந்துவிட்டது" என கலா மாஸ்டர் முதல் முறையாக கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: துளியும் மேக்கப் இல்லாமல்... சாதாரண புடவையில் த்ரிஷா! வேற லெவல் அழகில் வெளியான ரீசென்ட் போட்டோஸ்!